September 10, 2024

பெரியமடுவில் அகோர மழை; பல வீடுகள் சேதம்!

மன்னார் – மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட பெரிய மடு கிராமத்தில் நேற்று (30) மாலை இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கடும் மழையினால் 4 வீடுகள் சேதமடைந்துள்ளதோடு, தோட்ட செய்கையும் பாதிப்படைந்துள்ளது.

பெரிய மடு கிராமத்தில் இடி,மின்னல் தாக்கத்துடன் கூடிய மழையினால் வீடு ஒன்று பகுதி அளவில் சேதமடைந்துள்ளதோடு, அக்கிராமத்தில் ஏற்பட்ட மினி சூறாவளி தாக்கத்தினால் மூன்று வீடுகள் பாரிய அளவில் சேதமடைந்துள்ளது.

இதன்போது பப்பாசி செய்கை முழுமையாக பாதிப்படைந்துள்ளதோடு, பலாமரம், வாழைமரம் போன்றன சேதமடைந்துள்ளது.

இதனால் சுமார் 17 குடும்பங்கள் வரை பாதிப்படைந்துள்ளனர்.