März 23, 2023

மரமேறிய சிறுவன் பலி?

மரம் ஒன்றில் ஏறிய 13 வயதுச் சிறுவன், அதிலிருந்து தவறி வீழ்ந்து பரிதாபமாக உயிரிழந்துள்ளான்.

இந்தச் சம்பவம் கல்வியங்காடு புதிய செம்மணி வீதியில் இன்று (30) மாலை இடம்பெற்றது.

சம்பவத்தில் அதே இடத்தைச் சேர்ந்த பாஸ்கரன் மதுமிதன் (வயது-13) என்ற சிறுவனே உயிரிழந்துள்ளான்.

சிறுவனின் சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பான விசாரணைகளை கோப்பாய் பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.