September 16, 2024

நீங்கள் கொண்டாடினால் நாமும் கொண்டாடுவோம் – சிவாஜி மிரட்டல்

யுத்த வெற்றிச் சின்னங்களை நிறுவி வெற்றி விழாக்களை நீங்கள் கொண்டாடினால் எங்கள் போராட்ட வெற்றி நடவடிக்கைகளையும் மீள்
நினைத்துப் பார்க்கப்படும் என்பதை ஜனாதிபதியும் அரசாங்கமும் மறக்கக் கூடாது எனத் தெரிவித்துள்ள எம்.கே.சிவாஜிலிங்கம், நீங்கள் செய்கின்ற வெற்றிவிழாக்கள் நினைவுச் சின்னங்கள் என்பது எமதுபோராட்ட வரலாற்றை மீண்டும் நினைவுபடுத்தும் என்றார்.

யாழ் ஊடகஅமையத்தில் நேற்று (30) நடாத்திய ஊடக சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

போர் வெற்றிவிழாவை மே 18 ஆம் திகதி மிகப் பெரியஅளவில் கொண்டாடுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக நாங்கள் அறிகிறோம். ஆகவே அந்த முயற்சியை அரசாங்கம் கைவிட வேண்டுமெனக் கோருகின்றோம்.
அவ்வாறு இல்லாவிட்டால் நீங்கள் கொண்டாடுவது போன்று எங்கள் பொராட்ட வெற்றி நடவடிக்கைகள் செய்திகளையும் மீள் நினைத்துப் பார்க்கப்படும் என்பதையும் நீங்கள் மறக்கக் கூடாது.

எங்கள் நினைவுச் சின்னங்களை நீங்கள் இடித்துஅழித்து உடைத்திருக்கின்றீர்கள். குறிப்பாக உங்கள் வெற்றிச் சின்னமாக ஆனையிறவில் ஒரு படையினரின் படமும் கவச வாகனத்தையும் வைத்தள்ளீர்கள். அந்த ஆனையிறவுதளம் எப்போது வெற்றிகொள்ளப்பட்டது எப்போது அழிக்கப்பட்டது என்ற அந்தத் தளம் குறித்தான உண்மைகளை ஏன் சொல்ல மறந்து விட்டீர்கள். – என்றார்.