September 16, 2024

சுவிட்சர்லாந்தில் கடந்த 24 மணிநேரத்தில் 76 பேர் பலி!!

சுவிட்சர்லாந்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 20,000-க்கும் மேல் தொட்டுள்ள நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 76 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் காரணமாக சுவிட்சர்லாந்தில் 20,201 பேர் கொரோனா வைரஸிற்கு நேர்மறையான சோதனைகளை பெற்றுள்ளதாகவும், இது முந்தைய நாளைடை விட 1000 அதிகம் என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கடந்த சனிக்கிழமை மட்டும், கொரோனா வைரஸால் 76 பேர் உயிரிழந்துள்ளதால், தற்போது நாட்டில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 500-ஐ தாண்டியுள்ளது.

சுமாட் 8.5 மில்லியன் மக்கள் தொகை கொண்ட சிறிய ஆல்பைன் நாட்டில் மக்கள் தொகை அளவோடு ஒப்பிடும் போது, இது மிகவும் மோசமான பாதிப்புகளில் ஒன்று என்று கூறப்படுகிறது.

கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக கொரோனா வைரஸால் 76 பேர் இறந்துள்ளனர். இதனால் தொற்றுநோயால் சுவிட்சர்லாந்தின் இறப்பு எண்ணிக்கை 540-ஆக உயர்ந்துள்ளது என்று சுகாதார அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.

மேலும், நாங்கள் இன்னும் உச்சத்தை எட்டவில்லை என்று சுகாதார அமைச்சகத்தின் அதிகாரி டேனியல் கோச் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.

சுவிட்சர்லாந்தில் ஒரு தனிநபருக்கு அதிகமான சோதனைகளை வழங்கிய நாடுகளில் ஒன்று.

பிப்ரவரி 24-ஆம் தேதி நாட்டில் முதல் கொரோனா வைரஸ் நோயாளி கண்டுபிடிக்கப்பட்ட பின்னர், 150,000 க்கும் மேற்பட்ட சோதனைகள் நிர்வகிக்கப்பட்டுள்ளன. இதில் சுமார் 15 சதவிகிதம் நேர்மறையானவை.

கொரோனா வைரஸிற்கான பாதுகாப்பான சோதனையை எளிதாக்க உதவும் வகையில், தலைநகர் பெர்ன் உட்பட பல இடங்களில் Drive-in என்ற சோதனை நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

கடந்த 24 மணி நேரத்தில், மட்டும் கிட்டத்தட்ட 7,000 சோதனைகளை நடத்தப்பட்டுள்ளது. இதில் 975 நேர்மறையானது என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கடுமையாக பாதிக்கப்பட்ட இத்தாலியின் எல்லையான சுவிட்சர்லாந்தின் தெற்கு மண்டலமான Ticino, பெரும்பாலான கொரோனா வழக்குகளை பதிவு செய்துள்ளது, அதைத் தொடர்ந்து ஜெனீவாவும் உள்ளது குறிப்பிடத்தக்கது.