September 10, 2024

சிறுவனை கடித்து கொன்ற முதலை!

மட்டக்களப்பு – வாகரை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட புணாணை மைலந்தனை பிரதேசத்தில் முதலை கடித்த நிலையில் சிறுவன் ஒருவரின் சடலம் நேற்று (02) மாலை மீட்கப்பட்டுள்ளது.

ஊடரங்கு சட்டம் அமுல்ப்படுத்தப்பட்ட நிலையில் உணவுக்காக மைலந்தனை பிரதேசத்தைச் சேர்ந்த சிலர் குளத்தில் மீன்பிடித்துக் கொண்டிருக்கும் போது எதிர்பாராத நிலையில் சிறுவனை முதலை கடித்து இழுத்து சென்றதாக இவருடன் மீன்பிடிக்க சென்ற நண்பர்கள் தெரிவித்தனர்.

புணாணை மைலந்தனை பகுதியைச் சேர்ந்த தியாகராஜா கஜேந்திரன் (வயது 15) எனும் சிறுவனே முதலை கடித்து மரணமடைந்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன தெரிவித்தார்.