சமூகத்துக்குள் கொரோனா இல்லை; என்ஐடி உசார்!

கொரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்ட நோயாளிகள் அனைவரும் நாட்டின் 19 பகுதிகளில் கண்டறியப்பட்ட தொற்றாளிகளுடன் நேரடியாக தொடர்புபட்டவர்களே என்று பொலிஸ் பேச்சாளரும், பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

மேலும்,

இதுவரை கொரோனா வைரஸ் தொற்று சமூகத்துக்குள் பரவவில்லை என்பதை சுகாதார அதிகாரிகள் சுட்டிக் காட்டியுள்ளனர்.

கொரோனாவை தடுப்பதில் தேசிய புலனாய்வு பிரிவு முக்கியபங்கு வகிக்கின்றது.

நோய் தொற்றாளிகள் காணப்பட்ட பகுதிகளில் உள்ள மக்கள் தேவைப்படும் போது பாதுகாப்பு படைகள், சுகாதார அதிகாரிகளுக்கு போலியான தகவல் வழங்குவதை தவிர்க்க வேண்டும். – என்றார்.