April 24, 2024

ஊரடங்கு வேளையில்……. யாழில் விளையாடியவர்களை புரட்டி எடுத்த இராணுவம்…

வலிகாமம் வடக்கில் ஊரடங்கு சட்டத்தின் போது தேவையற்ற விதத்தில் நடமாடியவர்களை இராணுவம் விரட்டியடித்து வீடுகளுக்குச் செல்ல வைத்த சம்பவம் ஒன்று இன்று இடம்பெற்றுள்ளது.

தெல்லிப்பழை. குட்டியபுலம் , வசாவிளான், பலாலி போன்ற கிராம பகுதிகளில் இவ்வாறான விளையாட்டுக்களில் ஈடுபட்ட இளைஞர்கள் மீதே பிரம்படி விழுந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண நிலையை அடுத்த யாழ்ப்பாணத்தில் மறு அறிவித்தல் வரை ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் ஊரடங்கு நேரத்தில் வெளியே நடமாடுவோர் மீது கடுமையான சட்ட நடவ டிக்கைகள் எடுக்கப்பட்டும் வருகின்றன

எனினும் சில இளைஞர்கள் தமது பொழுதைக் கழிக்க, ஆலயங்கள். சன சமூக நிலையங்கள், பூட்டிய கடைகளுக்கு முன்பும் , மற்றும் வீடுகளில் ஒன்று கூடியும் கரம் போட், காட்ஸ் போன்ற விளையாட்டுக்களில் அதிகம் ஈடுபட்டு வருகின்றனர்.

கொரோனா பரவலை தடுக்க சமூக விலகலை கடைப்பிடிக்குமாறு அறிவித்திருந்தபோதும், அதனைப் பொருட்படுத்தாது இளைஞர்கள் சிலர் இவ்வாறான செயல்களில் ஈடுபடுகின்றனர்.

இந்த நிலையில் இவ்வாறு ஒன்று கூடியவர்களை பாதுகாப்பு பிரிவினர் சிறிய ஒழுங்கைகள், வீதிகளுக்குள் மோட்டார் சைக்கிளில் சென்று இவ்வாறு விரட்டியடித்துள்ளதாக கூறப்படுகின்றது.

அத்தோடு, விக்கெட் மற்றும் பிரம்புகளுடன் பொலிஸாரும் படையினரும் ரோந்துப் பணிகளிலும் ஈடுபட்டதாகவும் மேலும் தெரிவிக்கப்படுகிறது.