சகலருக்கும் நிவாரணம் வழங்குக

அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்டுள்ள நிவாரணத்திட்டங்கள் இன்னும் மக்களைச் சென்றடையவில்லை. எனவே, இது விடயத்தில் அரசாங்கம் துரிதமாக செயற்பட வேண்டும் என்று சஜித் அணியின் நாடாளுமன்ற வேட்பாளர் வேலுகுமார் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் இன்று (01) விடுத்துள்ள அறிக்கையில் இதனை தெரிவித்தார். மேலும்,

கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதற்காக பொறுப்புடன் செயற்படும் அதேவேளை, மக்களுக்கு தேவையான அத்தியாவசியை சேவைகளை தங்குதடையின்றி அரசாங்கம் வழங்க வேண்டும்.

வைரஸிலிருந்து மக்களை பாதுகாப்பதுபோல், பட்டினி சாவில் இருந்தும் அவர்களை மீட்டெடுக்க வேண்டும். – என்றார்.