April 20, 2024

ஊரடங்குச் சட்டம் தொடர்பாக ஜனாதிபதி அமைச்சரவைக்கு விளக்கம்!

நாடளாவிய ரீதியில் அமுல்ப்படுத்தப்பட்டு வருகின்ற ஊரடங்குச் சட்டம் தொடர்பாக தான் தனிப்பட்ட ரீதியில் எந்த தீர்மானங்களையும் மேற்கொள்ளவில்லை எனவும் வைத்தியர்களின் ஆலோசனைகளின் அடிப்படையிலேயே தீர்மானங்கள் மேற்கொள்ளப்படுவதாகவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
நாடளாவிய ரீதியில் எதிர்வரும் 6 ஆம் திகதி வரை ஊரடங்குச் சட்டம் அமுல்ப்படுத்தப்பட்டுள்ள நிலையில் நேற்று(01.04.2020) நமைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் கருத்துரைக்கும்போதே மேற்கண்டாவாறு தெரிவித்;துள்ளார்.
மேலும் குறித்த அமைச்சரவைக் கூட்டத்தில் அமுலில் உள்ள ஊரடங்குச் சட்டம் காரணமாக நாடளாவிய ரீpதியில் மக்கள் எதிர்கொண்டு வருகின்ற அசௌரகியங்கள் தொடர்பாக முன்னுரிமை அளித்து கலந்தாலோசிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

யாழில் ஊரடங்கு நீடிப்பதற்கு காரணம் வைத்தியத் துறையினர்?!

யாழ்ப்பாணத்தில் தொடர்ந்தும் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படுகின்றமைக்கு பிராந்திய வைத்தியத் துறையிரே காரணமென்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதாவது, யாழ்ப்பாணத்தில் காணப்படுகின்ற மருத்துவ உட்கட்டமைப்பு மற்றும் உபகரண வசதிகள் தொடர்பில் திருப்தியின்மையை வெளியிட்டு வருகின் யாழ். வைத்தியத் துறையினர், துரதிஸ்டவசமாக கொறோனாவின் தாக்கம் வீரியமடையுமாயின் தம்மிடம் இருக்கும் வளங்களைப் பயன்படுத்தி கட்டுப்படுத்துவது அல்லது சமாளிப்பது இயலாத காரியம் என்ற எச்சரிக்கையை தொடர்ந்தும் உயர் மட்டங்களுக்கு வலியுறுத்தி வருவதாக தெரிகின்றது.

இதன்காரணமாக யாழ்ப்பாணத்தில் ஊரடங்கு நீக்கப்படுவதனை விரும்பாத வைத்திய துறையினர், ஏற்கனவே கொறோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர் மற்றும் சுவிஸ் மதகுரு ஆகியோருடன் தொடர்புபட்டவர்கள் ஊடாக கொறோனா பரவுவதற்கு சாத்தியம் இல்லை என்பதை உறுதிப்படுத்தும் வரையிலாவது ஊரடங்கை இறுக்கமாக அமுல்ப்படுத்த ஆர்வம் செலுத்துவதாக தெரிகின்றது.

இந்நிலையில், கொரோனோ தொற்று சந்தேகத்தில் வடக்கு மாகாணம் முழுவதும் தனிமைப்படுத்தப்பட்டுள்ள 346 பேருக்கும் தனிமைப்படுத்தல் காலம் முடிவடையும வரையில் தொற்று இணங்காணப்படாது விட்டால் எதிர்வரும் ஆறாம் திகதி தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்படுவார்கள் என வடக்கு மாகாண சுகாதார சேவைகள் திணைக்களப் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் நேற்று(01.04.2020) ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

அதேவேளை, யாழ்ப்பாண மக்கள் அவதானத்துடன் அரசாங்க அறிவுறுத்தல்களை பின்பற்ற வேண்டும் எனத் தெரிவித்துள்ள யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியக் கலாநிதி என். சத்தியமூர்த்தி, மக்களை தேவையற்ற குழப்பங்களுக்கு உள்ளாக வேண்டாம் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார். இவர் இறுதி யுத்த காலத்தில் இறுதி வரை யுத்த முனையில் இருந்து கிடைக்கின்ற வளங்களைப் பயன்படுத்தி வைத்திய சேவை புரிந்த வைத்தியர்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.