இராணுவம் மீது உரும்பிராயில் தாக்குதல்?

காங்கேசன்துறையின் கீரிமலையில் காவல்துறை மீது வாள் வெட்டு ஒருபுறம் அரங்கேற யாழ்.உரும்பிராயில்  இலங்கை இராணுவ சிப்பாய்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
ஆட்டோவில் வந்து படையினர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனிடையே சம்பவத்தையடுத்து இராணுவத்தினர் மற்றும் காவல்துறை குவிக்கப்பட்டு நடத்தப்பட்ட தேடுதலில் 3 இளைஞர்கள் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
எனினும் தாக்குதலிற்கான காரணம் இதுவரை வெளிவந்திருக்கவில்லை.