சீனா அனுப்பிய எட்டு மில்லியன் மாஸ்குகளுக்கு பணம் கொடுக்க முடியாது: கனடா பிரதமர்

சீனா அனுப்பியுள்ள சுமார் எட்டு மில்லியன் மாஸ்குகளும் தரமற்றவையாக இருப்பதால், அவற்றிற்கு பணம் கொடுக்க முடியாது என கனேடிய பிரதமர் திட்டவட்டமாக கூறிவிட்டார்.

சீனாவிடம் ஆர்டர் செய்த 11 மில்லியன் மாஸ்குகளின் ஒரு பகுதியாக வந்த இந்த N95 மாஸ்குகளில், வெறும் ஒரு மில்லியன் மாஸ்குகள் மட்டுமே கனேடிய தரத்துக்கு ஏற்றவையாக உள்ளன.

மற்றொரு 1.6 மில்லியன் மாஸ்குகள் பரிசோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளன.

ஊடகவியலாளர்கள் சந்திப்பு ஒன்றில் பேசிய கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, நமது மருத்துவப்பணியாளர்கள் பயன்படுத்துவதற்கு ஏற்ற தரம் உள்ளவையாக அந்த மாஸ்குகள் இல்லாததால், அவற்றிற்கு கனடா பணம் செலுத்தாது என்று கூறினார்.

ஏற்கனவே சீன வர்த்தகர் ஒருவரிடம் வாங்கிய சுமார் 62,000 மாஸ்குகளை ரொரன்றோ திருப்பி அனுப்பிவிட்டது.

அது குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்ட மேயர் அலுவலகம், அந்த மாஸ்குகள் தரக்கட்டுப்பாடுகளை சந்திக்கவில்லை என்பதால் அவை திருப்பி அனுப்பப்படுவதாக தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.