September 9, 2024

ஒரே நாளில் 279 பேருக்கு தொற்று: தமிழகத்தில் உயிரிழப்பு 27; தொற்றுக்கள் 6,535ஆக அதிகரித்துள்ளது!

சென்னையில் இன்று ஒரே நாளில் 279 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து, சென்னையில் கொரோனாவால் பாதிக்கபட்டவர்களின் எண்ணிக்கை 3,330 ஆக உயர்வு…!
தமிழகத்தில் இன்று மேலும் 526 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 6,535 ஆக உயர்ந்துள்ளது, கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27 ஆக உள்ளது.


இது குறித்து தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது…. தமிழகத்தில் இன்று மேலும் 526 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் மொத்தம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6,535 ஆக உயர்ந்துள்ளது. சென்னையை சேர்ந்த 67 வயது, 58 வயது, 73 வயதான 3 பெண்கள், மற்றும் ராமநாதபுரத்தை சேர்ந்த 70 வயதான பெண் என கடந்த 24 மணிநேரத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்த பலி எண்ணிக்கை 44 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 4,664 பேர் சிகிச்சையில் உள்ளனர். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

சென்னையில் மட்டும் 279 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் சென்னையில் மொத்தம் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3,330 ஆக அதிகரித்துள்ளது. இன்று விழுப்புரத்தில் 67 பேர், செங்கல்பட்டில் 40 பேர், பெரம்பலூரில் 31, திருவள்ளூரில் 26 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்த பாதிப்பில், 12 வயதுக்கு உட்பட்டவர்கள் 329 பேர், 13 முதல் 60 வயதுக்கு உட்பட்டவர்கள் 5,752 பேர், 60 வயதை கடந்தவர்கள் 454 பேர் உள்ளனர். இன்று ஒரே நாளில் 219 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர் . தற்போது 4,664 பேர் சிகிச்சையில் உள்ளனர்.