September 10, 2024

பிரான்சின் முடக்க நிலை எதிர்வரும் திங்கட்கிழமை நீக்கம்!!

பிரான்சில் நடைமுறையில் உள்ள முடக்க நிலை எதிர்வரும் திட்கட்கிழமை விலக்கப்படும் என பிரஞ்சுப் பிரதமர் எட்வேர்ட் பிலிப் தெரிவித்துள்ளார்.

கொரோனாவினால் நாளாந்தம் ஏற்படும் உயிரிழப்பு மற்றும் தொற்று்கள் குறைவடைந்ததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்வுள்ளது. எனினும் முடக்க நிலையில் தளர்வு ஏற்பட்டாலும் தொற்று நோய் அதிகமாக இருக்கும் பாரிசில் நகரில் கட்டுப்பாடுகள் கடுமையாக தொடரவுள்ளது எனக் குறிப்பிட்டார்.

பிரான்சில் கொரோனாவினால் பாதிக்கப்பட்ட பகுதிகள் நாடு சிவப்பு மற்றும் பச்சை ஆகிய இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்படவுள்ளது. அதற்கு ஏற்ப கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.