என் மகனை பார்க்காமலே போய் விடுவேனோ என்ற பயம்தான் கொரோனாவை வெல்லும் மனோவலிமையைக் கொடுத்தது! பிரித்தானிய பிரதமர்

தான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது, தனக்கொரு மகன் பிறக்க இருக்கும் நிலையில், அவனைப் பார்க்காமலே இறந்துவிடுவேனோ என்ற பயம்தான் கொரோனாவை வெல்லும் மனோவலிமையை தனக்குக் கொடுத்தது என்று கூறியுள்ளார் போரிஸ் ஜான்சன்.

கொரோனா நோய்த்தொற்றுக்கு ஆளான பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சன் (55), ஏப்ரலில் ஒரு வாரம் புனித தாமஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

மூன்று நாட்கள் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த ஜான்சன், தனது இறப்பு குறித்து அறிவிக்க மருத்துவர்கள் தயாரான விடயம் குறித்து ஏற்கனவே தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், The Sun பத்திரிகைக்கு அளித்துள்ள பேட்டியில், கொரோனாவுடன் போராடிக்கொண்டிருக்கையில், கர்ப்பிணியான தனது காதலி கேரி சைமண்ட்ஸ் மற்றும் பிறக்கப்போகும் தன் குழந்தையைக் குறித்த நேர்மறை எண்ணங்கள் மீது கவனம் செலுத்தியதாக தெரிவித்துள்ளார் அவர்.