September 30, 2023

மஹிந்தவின் கூட்டத்துக்கு நாம் செல்வோம்; சித்தர்

பிரதமர் மஹிந்த ராஜபக்ச அழைப்பு விடுத்த கூட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு கலந்துகொள்ளும் என கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றான புளொட் அமைப்பின் தலைவர் த.சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் கந்தரோடையிலுள்ள அவரது இல்லத்தில் இன்று (2) நடத்திய ஊடக சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

கூட்டமைப்பின் மூன்று கட்சிகளின் தலைவர்களும் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனும் கலந்துரையாடி இந்த முடிவுக்கு வந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நடைபெறவுள்ள கூட்டத்தில் இரா.சம்பந்தனுடன் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொள்வார்கள் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.