November 21, 2024

தென்துருவத்திற்கு தனியாக சென்று சாதனை படைத்த முதல் இந்திய பெண்!

ராணுவத்தில் பணிபுரியும் இவர் சாதனையை படைத்த முதல் பெண்ணாக திகழ்கிறார்

webteamJan 5, 2022 – 19:19051

இங்கிலாந்தில் ராணுவ அதிகாரியான இந்திய வம்சாவளியை சேர்ந்த சீக்கிய பெண்ணான 32 வயதான ஹர்பிரீத் சிங் என்பவர் தனி ஒருவராக தெந்துருவத்தை அடைந்து வரலாற்று சாதனை படைத்துள்ளார்.இந்த சாதனையை படைத்த முதல் பெண் என்ற பெருமையை இவர் பெற்றுள்ளார்.

மைனஸ் 50 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை மற்றும் மணிக்கு 96 கி.மீ. வேகத்தில் வீசிய காற்றுக்கு மத்தியில் தொடர்ந்து 40 நாட்களாக 1,127 கி.மீ. பயணம் செய்து அவர் தென்துருவத்தை அடைந்தார்.சவால் மிகுந்த இந்த பயணத்தின் அனுபவங்களை தொடர்ச்சியாக சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு வந்த ஹர்பிரீத் சிங், தென்துருவத்தை அடைந்த சாதனை நிகழ்வை நேரலையில் வீடியோவாக ஒளிபரப்பியுள்ளார்.

அதன் பின்னர் இதுகுறித்து அவர் சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட பதிவில் “பனிப்பொழிவு இருக்கும் தென்துருவத்துக்கு சென்றதாகவும், பல உணர்வுகளை உணர்ந்ததாகவும் . 3 ஆண்டுகளுக்கு முன்பு துருவ உலகத்தைபற்றி எனக்கு எதுவும் தெரியாது, இறுதியாக இங்கே இருப்பதை யதார்த்தமாக உணர்கிறேன். இங்கு வருவது கடினமாக இருந்தது. எனக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி சொல்ல விரும்புகிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.