Mai 12, 2025

சந்திவெளி விபத்தில் முதியவர் மரணம்!

மட்டக்களப்பு- சந்திவெளியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொருவர் படுகாயமடைந்துள்ளார்.

நேற்று மாலை முச்சக்கர வண்டியுடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானது. குறுக்குப்பாதையிலிருந்து பிரதான வீதிக்கு நுழைந்த முச்சக்கர வண்டியுடன் மோட்டார் சைக்கிள் மோதியதில் முச்சக்கர வண்டியினைச் செலுத்தியவர் உயிரிழந்துள்ளார்.

மோட்டார் சைக்கிளை செலுத்தியவர் படுகாயமடைந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சந்திவெளி பிரதேசத்தைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தந்தையான 68 வயதுடைய நாகப்பன் ராமையா என்பவரே உயிரிழந்தவர்