Dezember 3, 2024

யாழ்ப்பாணம்:ஊசி என்றாலே பயம்!

ஓமிக்ரானில் இருந்து தப்பிக்க பூஸ்டர் டோஸை விரைவில் பெறுவது முக்கியம் என்று எச்சரிக்கப்பட்டுள்ள நிலையில் யாழ்ப்பாணத்தில் மட்டும் இதுவரை ஒரு இலட்சத்து 20ஆயிரம் பேருக்கும் மேல் எந்தவொரு தடுப்பூசியையும் பெற்றிருக்காமை கண்டறியப்பட்டுள்ளது.

முன்னதாக இரு தடுப்பூசிகள்  யாழ்ப்பாணத்தில் வழங்கப்பட்டு தற்போது மூன்றாவதாக ஓமிக்ரானில் இருந்து தப்பிக்க பூஸ்டர் டோஸ் வழங்கப்பட்டுவருகின்றது.

இந்நிலையில் யாழ்.குடாநாட்டில் கொரோனா தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ளவேண்டுமென அடையாளப்படுத்தப்பட்ட 3இலட்சத்து 80ஆயிரம் பேரில் இதுவரை ஒரு இலட்சத்து 20ஆயிரம் பேருக்கும் மேல் எந்தவொரு தடுப்பூசியையும் பெற்றிருக்காமை கண்டறியப்பட்டுள்ளது.