மாகாணசபை தேர்தலில்லை:கூட்டமைப்பின் மீதே குற்றச்சாட்டு!
இலங்கையில் புதிய சட்டமூலத்தை கொண்டு வந்து நிறைவேற்றும் வரை மாகாண சபைத் தேர்தலை நடத்த முடியாது என தேர்தல் சட்ட மறுசீரமைப்பு தொடர்பான விசேட நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் தலைவரான அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
அன்று நாங்கள் வேண்டாம் எனக் கூறிய போது, மக்கள் விடுதலை முன்னணி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போன்ற அரசியல் கட்சிகள் தவறுதலாக சட்டத்திற்கு ஆதரவாக கைகளை உயர்த்தின.
மாகாண சபை சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டுமாயின் பல புதிய திருத்தங்களை உள்ளடக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.
அந்த சட்டமூலம் தவறான முறையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.சட்டமூலத்தின்படி முற்றாக நீக்க வேண்டும். தேர்தலை நடத்த அரசாங்கம் தயாராக இருக்கின்றது.
புதிய சட்டமூலம் உருவாக்கப்பட்ட பின்னர் தேர்தலை நடத்துவோம் எனவும் அமைச்சர் கூறியுள்ளார்.
அதேவேளை அமைச்சரவையில் மாற்றங்கள் செய்யப்படுமா என்ற கேள்விக்கு பதிலளித்துள்ள தினேஷ் குணவர்தன, ஜனாதிபதிக்கு எந்த நேரத்திலும் அமைச்சரவையில் மாற்றங்களை செய்ய அதிகாரமும், இயலுமையும் இருக்கின்றது எனக் கூறியுள்ளார்.