இஸ்ரேல் மீது ராக்கெட் தாக்குதல் நடத்திய பாலஸ்தீன போராளிகள்: அச்சத்தில் மக்கள்!
பிரபல மத்திய கிழக்கு நாடான இஸ்ரேல் மீது ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காசாவில் உள்ள பாலஸ்தீன போராளிகள் சனிக்கிழமையன்று மத்தியதரைக் கடலை நோக்கி இரண்டு ராக்கெட்டுகளை ஏவினர். அந்த ராக்கெட்டுகள் டெல் அவிவ் கடற்கரையில் தாக்கியது என இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது.
இந்த ராக்கெட் தாக்குதலில் உயிர்ச்சேதமோ, பொருட்சேதமோ ஏற்படவில்லை என பொலிசார் தெரிவித்தனர்.
காசாவின் போராளிக் குழுக்கள் ஏதுவும் இந்த ராக்கெட் தாக்குதலுக்கு உடனடியாக பொறுப்பேற்கவில்லை.
முன்னதாக புதன்கிழமையன்று, காசாவில் இருந்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது, இதில் ஒரு இஸ்ரேலியர் காயமடைந்தார்.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்ரேலிய இராணுவம் நடத்திய தாக்குதலில் மூன்று பாலஸ்தீனியர்கள் காயமடைந்தனர்.
கடந்த மே மாதம் இஸ்ரேல்-காசா இடையே நடந்த 11 நாள் போருக்குப் பிறகு இரு நாட்டு எல்லை பகுதியிலும் பெரும்பாலும் அமைதி நிலவி வருகிறது.
இந்நிலையில், இந்த துப்பாக்கிச் சூடு, ராக்கெட் தாக்குதல்களால் மீண்டும் இரு நாடுகளுக்கு இடையே மோதல் வெடிக்குமோ என மக்களிடையே அச்சம் ஏற்பட்டுள்ளது.