பட்டினியில் இலங்கை மக்கள்!
இலங்கையில் காய்கறிகளின் விலைகள் இரண்டு, மூன்று மடங்கு அதிகரித்துள்ள நிலையில் மக்களது வாழ்வியல் அச்சமூட்டுவதாக மாறியிருக்கின்றது.
சில்லறைச் சந்தையில் ஒரு கிலோ 600 விற்று வந்த பச்சை மிளகாய் 1200 என இரட்டித்துள்ளது.
240 ரூபாய்க்கு கிடைத்த கேரட் தற்போது 560 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
சாதாரண மரவள்ளி கிழங்கு கூட 300 ரூபாவிற்கு அதிகரித்துள்ளது.
இந்த விலையேற்றத்தினால் தனது வியாபாரம் மிக மோசமாகப் பாதிப்படைந்து விட்டது என சிறு வியாபாரிகள் கூறுகின்றனர்.
அரிசிக்கான விலையும்; அதிகரித்துள்ளது. இலங்கையில் அரசிக்கு கட்டுப்பாட்டு விலைகள் இருந்தன. அரசு நிர்ணயிக்கும் விலைகளிலேயே அரிசியை விற்பனை செய்யவேண்டியிருந்தது. ஆனால், இப்போது அரிசிக்கான கட்டுப்பாட்டு விலையை அரசு நீக்கி விட்டது. இதனால் எவரும் எந்த விலைக்கும் அரிசியை விற்க முடியும் எனும் நிலை ஏற்பட்டு விட்டது.
இதனால் மக்களது அன்றாட வாழ்வு பரிதாபகரமாக மாறியிருக்கின்றது.