Mai 13, 2025

தமிழ் பொலிஸார் சடலமாக மீட்பு!

யாழ்ப்பாணம் இளவாலை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் மட்டக்களப்பைச் சேர்ந்த தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

கீரிமலை, கூவில் வீதியில் உள்ள வாடகை வீட்டில் இன்று காலை அவர் சடலமாக மீட்கப்பட்டார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

மட்டக்களப்பைச் சேர்ந்த அந்தோனிப்பிள்ளை ரமணன் (வயது-47) என்ற பொலிஸ் உத்தியோகத்தரே உயிரிழந்துள்ளார்.

அவரது குடும்பத்தினர் புத்தாண்டை முன்னிட்டு மட்டக்களப்பு சென்றிருந்த நிலையில் பொலிஸ் உத்தியோகத்தர் வீட்டில் தனிமையில் இருந்துள்ளார் என்றும் பொலிஸார் கூறினர்.

அவரது உயிரிழப்புக்கான காரணம் கண்டறியப்படாத நிலையில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன என்று பொலிஸார் குறிப்பிட்டனர்.