பிரான்சில் புத்தாண்டு நாளில் 874 வாகனங்கள் எரிக்கப்பட்டன
புத்தாண்டு தினத்தன்று பிரான்ஸ் முழுவதும் மொத்தம் 874 வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன.ஆனால் கொரோனா வைரஸ் தொடர்பான கட்டுப்பாடுகள் நடைமுறையில் இருப்பதால், அந்த எண்ணிக்கை முந்தைய ஆண்டுகளை விட குறைவாக உள்ளது என்று உள்துறை அமைச்சர் ஜெரால்ட் டார்மானின் தெரிவித்துள்ளார்.
2019 ஆம் ஆண்டில் மொத்தம் 1,316 கார்கள் தீ வைத்து எரிக்கப்பட்டதாக உள்துறை அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், முந்தைய ஆண்டுகளை விட அதிகமான மக்கள் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். 2019 இல் 376 உடன் ஒப்பிடும்போது 441 பேர் விசாரணைக்காக கொண்டு செல்லப்பட்டனர்.
பிரான்சின் வடகிழக்கு பகுதியில் உள்ள ஸ்ட்ராஸ்பேர்க்கில், வாகனங்கள் மற்றும் குப்பைத் தொட்டிகள் எரிக்கப்பட்ட பின்னர் 31 பேர் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டனர்.
விசாரிக்கப்பட்டவர்களில் ஆறு பேர் ஊரடங்கு உத்தரவை மீறிய சிறுவர்கள். மீதமுள்ளவர்கள் தீ வைப்பு சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்று ஸ்ட்ராஸ்பேர்க்கில் உள்ள அதிகாரிகளின் கூறினர். நான்கு காவல்துறை அதிகாரிகள் சிறு காயங்களால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதையும் உறுதிப்படுத்தினர்.