März 29, 2025

கடன் கொடுக்க சொல்லும் சுப்பிரமணிய சுவாமி

 

இலங்கைக்கு இந்தியா பத்துபில்லியன் டொலர் கடன்களை வழங்குவதன் மூலம் சீனாவிற்கு ஒரு சகா கிடைப்பதை தடுக்கலாம் என சுப்பிரமணிய சுவாமி தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்

இந்து சமுத்திரத்தில் இந்தியா தனக்கு நீண்ட கால சகா ஒருவர் தேவை என கருதினால் இந்தியா  தற்போது ராஜபக்சஅரசாங்கத்திற்கு பத்து பில்லியன் அமெரிக்க டொலர்களை( ஒத்திவைக்கப்பட்ட வட்டி) கடனாக வழங்கவேண்டும்,அல்லது சீனாவிற்கு இளைய சகா ஒருவர் கிடைக்கும் நிலையை எதிர்கொள்ளவேண்டும்.

மோடி அரசாங்கம் பல வெளிவிவகார கொள்கைகளில் தோல்வியடைந்துள்ளது இலங்கை இன்னொன்றாக இருக்கவேண்டாம் என அவர் தெரிவித்துள்ளார்.