November 24, 2024

இலங்கைக்கு உதவ முன் வரும் சீனா

இலங்கை எதிர்நோக்கி வரும் டொலர் பிரச்சினைக்கு தீர்வு வழங்கும் நோக்கில் சீன அரசாங்கம் 1.5 பில்லியன் டொலர்களை வழங்க உள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

ஆளும் கட்சியின் முக்கிய அமைச்சர் விமல் வீரவன்ச இது குறித்து அறிவித்துள்ளார்.

கடன் செலுத்துகைக்காக சீனா இவ்வாறு கடனுதவி வழங்குவதாகவும் அவ்வாறு கிடைக்கப்பெற்றால் தற்போதைய நெருக்கடி நிலைக்கு தீர்வு கிடைக்கும் என தெரிவித்துள்ளார்.

பிட்ச் ரேடிங் நிறுவனத்தினால் வெளியிடப்பட்டுள்ள தரப்படுத்தல் ஓர் எதிர்வு கூறலே என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எதிர்வரும் ஆண்டில் இலங்கை கடன் செலுத்துகையில் சிரமங்களை எதிர்நோக்கும் என பிட்ச் ரேடிங் நிறுவனம் எதிர்வு கூறியுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதுவரையில் இலங்கை எந்தவொரு வெளிநாட்டு கடனையும் செலுத்தாமல் விட்டதில்லை என அமைச்சர் வீரவன்ச தெரிவித்துள்ளார்.