November 22, 2024

சுவிசில் நடைபெற்ற பாலா அண்ணா மற்றும் தமிழ்ச்செல்வன் உட்பட ஏனைய மாவீரர்களின் நினைவேந்தல்!

சுவிசில் நடைபெற்ற ‚தேசத்தின் குரல்“ அன்ரன் பாலசிங்கம், தமிழீழ அரசியற்துறைப் பொறுப்பாளர் பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் உட்பட 7 மாவீரர்களினதும் நினைவுகள் சுமந்த வணக்க நிகழ்வு!

தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம், தமிழீழ அரசியற்துறைப் பொறுப்பாளர் பிரிகேடியர்; சு.ப.தமிழ்ச்செல்வன் உட்பட 7 மாவீரர்களினதும் நினைவுகள் சுமந்த வணக்க நிகழ்வானது 19.12.2021 ஞாயிறு அன்று பேர்ண் மாநிலத்தில் சிறப்பாக நடைபெற்றது.

சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் நடைபெற்ற இவ்வணக்க  நிகழ்வில் பொதுச்சுடரேற்றலுடன் தமிழீழத் தேசியக்கொடி ஏற்றி வைக்கப்பட்டதனைத் தொடர்ந்து ஈகைச்சுடர்கள் ஏற்றப்பட்டு அகவணக்கத்துடன் சுடர், மலர்;வணக்கம் செலுத்தப்பட்டது.

மாவீரவித்துக்களான அரசியல் பெருந்தகைகள் சுமந்த இவ்வணக்க நிகழ்வில் எழுச்சிவணக்கப்;பாடல்கள், கவிவணக்கங்கள், பேச்சு, நினைவுப்பகிர்வும் இடம்பெற்றன. சுவிஸ் நாட்டில் தற்போது அதிகரித்துவரும் நோய்த்தொற்றுச் சூழ்நிலையில் ஒருநாள் காலஇடைவெளியில் மண்டபம் மாற்றித் தெரியப்படுத்திருந்த போதிலும்,   நோய்த்தொற்றுக்குரிய பாதுகாப்பு நடைமுறை விதிமுறைகளைப் பேணி, அரங்கம் நிறைந்து மக்கள் கலந்துகொண்டு வணக்கம் செலுத்தியமையானது மிகவும் உணர்வுபூர்வமாக அமைந்திருந்தது.

நிகழ்வின் இறுதியாக ‚நம்புங்கள் தமிழீழம்…“ பாடலைத் தொடர்ந்து தமிழீழத் தேசியக்கொடி கையேற்கப்பட்டதனைத் தொடர்ந்து உறுதியுடன் நிகழ்வுகள்; நிறைவுபெற்றன.