November 25, 2024

13ஆவது திருத்தச்சட்டத்தினை அடியோடு அகற்ற முயற்சி – சம்பந்தன்

பதவியில் உள்ள ராஜபக்ஷக்களின் அரசாங்கமானது அரசியலமைப்பில் உள்ள 13ஆவது திருத்தச்சட்டத்தினை புதிய அரசியலமைப்பின் பேரில் அடியோடு அகற்றுவதற்குரிய முயற்சிகளை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் அதிகாரப்பகிர்வின் முதற்படியாகவுள்ள 13ஐ பாதுகாத்து தமிழ் மக்களின் அபிலாஷைகளை பூர்த்தி செய்யும் அர்த்தபுஷ்டியான தீர்வினை நோக்கி நகர வேண்டும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

13 ஆவது திருத்தச்சட்டத்தினை முழுமையாக நடைமுறைப்படுத்துமாறு இலங்கை அரசாங்கத்தினை வலியுறுத்துவதை அடிப்படையாகக் கொண்டு இந்திய அரசாங்கத்திற்கு தமிழ் பேசும் கட்சிகள் ஒன்றிணைந்து எழுத்துமூலமான கோரிக்கை விடுவதற்குரிய முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்ற நிலையில் அச்செயற்பாடுகளுக்கு தலைமையேற்றுள்ள சம்பந்தன் வீரகேசரியிடம் கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

தற்போது ஆட்சியில் உள்ள ராஜபக்ஷ அரசாங்கமானது புதிய அரசியலமைப்பினை உருவாக்கும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதாக கூறுகின்றது. அந்த முயற்சிகளில் ரூடவ்டுபடும் ராஜபக்ஷக்களின் நோக்கம் வேறாக உள்ளது. குறிப்பாக தற்போதைய அரசியலமைப்பில் காணப்படும் அதிகாரப் பகிர்வின் முதற்படியாகவுள்ள 13 ஆவது திருத்தச்சட்டத்தினை அடியோடு அகற்றுவதற்குரிய நடவடிக்கைகளை எடுத்துள்ள தகவல்கள் கிடைக்கின்றன.

இலங்கையின் ஆட்சிப்பீடத்தில் அமர்ந்திருந்த ஜே.ஆர்.ஜயவர்த்தன முதல் தற்போதைய கோட்டாபய ராஜபக்ஷ வரையில் 13ஆவது திருத்தச்சட்டத்தினை முழுமையாக அமுலாக்குவோம் என்று பல சந்தர்ப்பங்களில் உள்நாட்டிலும்ரூபவ் வெளிநாடுகளிலும்ரூபவ் சர்வதேச சமூகத்தினருக்கும் வாக்குறுதிகளை வழங்கியுள்ளார்கள்.

குறிப்பாக, ரணசிங்க பிரேமதாஸ, சந்திரிகா குமாரதுங்க, ரணில் விக்கிரமசிங்க, மைத்திரிபால சிறிசேன, மஹிந்த ராஜபக்ஷ போன்றவர்கள் 13ஆவது திருத்தச்சட்டத்திற்கு அப்பால் சென்று அதிகாரங்களை பகிர்ந்து இனப்பிரச்சினைக்கான நிரந்தர தீர்வினைக் காண்போம் என்று கூறியிருந்தனர். துரதிஷ்டவசமாக அந்த வாக்குறுதிகள் பல்வேறு காரணங்கள் காரணமாக நிறைவேற்றப்படாத நிலைமை தற்போது வரையில் தொடருகின்றது.

இவ்வாறனதொரு சந்தர்ப்பத்தில்ரூபவ் தற்போது 13ஆவது திருத்தச்சட்டத்தினை முழுமையாக நடைமுறைப்படுத்துமாறு கோரவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. 13ஆவது திருத்தமானது நீண்டகாலம் நீடித்துக்கொண்டிருக்கும் தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்கான தீர்வாக அமையப்போவதில்லை.

தமிழ் மக்களின் அபிலாஷைகளை முழுமையாக பூர்த்தி செய்யப்போவதில்லை. ஆனால், அதிகாரப்பகிர்விற்கான முதற்படியாக அது காணப்படுவதால் அவ்விடயம் அகற்றப்படுமானால் மேலும் பல பாதிப்புக்கள் ஏற்படுவதற்கான நிலைமைகள் தோற்றம் பெறலாம். ஆகவே அரசியலமைப்பில் உள்ள 13ஆவது திருத்தச்சட்டத்தினை பாதுகாத்துக் கொண்டு அதற்கு அப்பால் சென்று தமிழ் மக்களின் அபிலாஷைகளை பூர்த்தி செய்யும் தீர்வினை பெற வேண்டும்.

அதாவதுரூபவ் ஐக்கிய இலங்கைக்குள் சமஷ்டி அடிப்படையிலான அதிகார பகிர்வுடனான அர்த்தபுஷ்டியான நீடித்து நிலைத்திருக்ககூடிய நிரந்தரமான தீர்வு காணப்பட வேண்டும் என்றார்.