இலங்கையில் கறுப்புச் சந்தை மாபியா!! வெளிச்சத்திற்கு வந்த தகவல்
உரத்தை இறக்குமதி செய்வதன் மூலம் கறுப்புச் சந்தை மாபியா நாட்டில் உருவாக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச (Sajith Premadasa) தெரிவித்துள்ளார்.
லுணுகம்வெஹெர பெரலிஹெல பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கருத்து வெளியிட்ட போதே அவர் இதனைக் கூறியுள்ளார். இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர்,
“தற்போதைய அரசாங்கம் விவசாயிகளின் உயிருடன் விளையாடி வருகிறது.
விசம் மற்றும் மலம் கலந்த உரத்தை பயன்படுத்தும் விவசாயிகளுக்கு பல்வேறு ஒவ்வாமைகள் அண்மைக் காலத்தில் ஏற்பட்டிருக்கிறது.
நாடு இன்று கடன் தரத்தில், அனைத்துலக அரங்கில் மிகவும் கீழ் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
எதிர்காலத்தில் வெளிநாடுகளிடம் சிறு கடனைக் கூட பெற முடியாத நிலைக்கு நாடு தள்ளப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.