November 24, 2024

எட்டிப்பார்த்த சீன தூதர்!

புலி எதிர்ப்பில் ஊன்றிப்போயுள்ள இந்திய ராஜதந்திர வட்டாரங்களை சீன நகர்வுகள் அச்சமடைய வைத்துள்ளது.

வடமாகாணத்தில் சீன உயர்மட்ட அதிகாரிகள் கடந்த சில நாட்களாக முன்னெடுத்துவரும் நகர்வுகளே அதிர்ச்சியை தோற்றுவித்துள்ளது.

வட மாகாணத்திற்கு 04 நாள்  விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கைக்கான சீன தூதுவர் குய் சென் ஹாங், இலங்கை கடற்பரப்பிற்குள் அமைந்துள்ள இராமர் பாலத்தின் மணல் திட்டுக்களை இன்று (17) பார்வையிட்டுள்ளார்.

மன்னார் தாழ்வுப்பாடு  வழியாக, கடற்படைக்கு சொந்தமான விரைவு படகின் மூலம், இராமர் பாலத்தின் மணல் திட்டுக்கள் வரை பயணித்து அவற்றை  அவர் பார்வையிட்டார்.

இலங்கை கடற்பரப்பிலுள்ள இராமர் பாலத்தின் மூன்றாவது மணல் திட்டு வரை பயணித்தனர்.

மன்னார் மாவட்டம் தாழ்வுப்பாட்டில் இருந்து ஒரு மணி நேர பயணத்தின்போது 17 கடல் மைல் தூரம் பயணித்தே அந்த இடத்தை அடைந்தனர்.

இவ்வாறு காணப்படும் இராமர் பால மணல் திட்டில் இருந்து 9 கிலோ மீற்றர் தொலைவிலேயே இந்தியா இருப்பதும் குறிப்பிடத்தக்கது.