P2P:பேரணிக்கு சென்றவர்களிற்கு வழக்கு!
பொத்துவிலில் இருந்து பொலிகண்டி வரையான பேரணியில் கலந்து கொண்ட 32 அரசியல் பிரமுகர்கள் மற்றும் செயற்பாட்டாளர்களிற்கு எதிராக வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
இதனிடையே பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட மட்டக்களப்பு தமிழ் உணர்வாளர் அமைப்பின் தலைவர் கணவதிப்பிள்ளை மோகனை எதிர்வரும் 31ம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
இணையத்தளங்களில் தடை செய்யப்பட்ட விடுதலைப்புலிகள் அமைப்பின் படங்களைப் பதிவேற்றியமை தொடர்பான குற்றச்சாட்டின் பேரில் கடந்த மே மாதம் 3ம் திகதி தமிழ் உணர்வாளர் அமைப்பின் தலைவர் கணவதிப்பிள்ளை மோகனை செங்கலடியில் உள்ள அவரது வீட்டில் வைத்து பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.