இலங்கையில் கண்டு எடுக்கப்பட்ட மிகப்பெரிய நீல இரத்தினக்கல் தொடர்பில் வெளியாகும் தகவல்
உலகின் மிகப்பெரிய 310 கிலோகிராம் நிறையுடைய நீல மாணிக்கக்கல் ஒன்று பலாங்கொடையில் அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டிருந்தது.
15 இலட்சத்து 50 ஆயிரம் கரட் பெறுமதியான நீல மாணிக்கக்கல் ஒன்றே கிடைத்துள்ளதாக தேசிய இரத்தினக்கல் மற்றும் தங்காபரண அதிகார சபையின் தலைவர் திலக் வீரசிங்க தெரிவித்திருந்தார்.
இதற்கமைய, தேசிய ரத்தினம் மற்றும் நகை ஆணையம் இந்த ரத்தினத்திற்கு சான்றளித்து, சர்வதேச சந்தையில் இதை விற்க அனுமதியளித்துள்ளது.
சுமார் 310 கிலோ எடை மதிப்புள்ள உலகின் மிகப்பெரிய நீல இரத்தினக்கல் இலங்கையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்டது. இலங்கையின் மாணிக்க நகரம் என்றும் அழைக்கப்படும் இரத்தினபுரியில் மூன்று மாதங்களுக்கு முன்னர் இந்த அரிய ரத்தினக்கல் கண்டுபிடிக்கப்பட்டது.
தேசிய ரத்தினம் மற்றும் நகை ஆணையம் மிகவும் மதிப்புமிக்க விலைமதிப்பற்ற இந்த நீல ரத்தினத்திற்கு சான்றளித்து, சர்வதேச சந்தையில் இதை விற்க அனுமதியளித்துள்ளது.
இந்நிலையில், இரத்தினக்கல்லில் இன்னும் சில பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட உள்ளதாக தேசிய இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகார சபையின் தலைவர் திலக் வீரசிங்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.