Oktober 22, 2024

இலங்கையுடன் புது ஒப்பந்தம் மேற்கொண்ட இந்தியா

இலங்கை வெளிநாடுகளிடம், அதிலும் குறிப்பாக சீனாவிடம் வாங்கிய அனைத்துக் கடன்களையும் நாங்கள் அடைக்கிறோம். அதனை திருப்பி செலுத்த தேவை இல்லை. ஆனால் இனியாவது நாங்கள் சொல்வதை கேட்க வேண்டுமென ஒரு புது உடன்பாட்டை இந்தியா முன் வைத்துள்ளது.

மேலும் இந்த உடன்படிக்கையை ஏற்றுக் கொள்ளுமாறு, அமெரிக்காவும் இலங்கைக்கு அழுத்தம் கொடுத்து வருகிறது.

இந்த நிலையில், இலங்கையின் வடக்குப் பகுதியில் காற்றாலை மற்றும் சூரிய மின்சக்தி திட்டத்தை இந்தியாவின் அதானி நிறுவனத்திற்கு வழங்குவதற்கு தயார் நிலை காணப்படுவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க (Patali Champika Ranawaka) தெரிவித்துள்ள கருத்தும், இந்திய சார்பு நிலையை இலங்கை எடுத்துள்ளதை காட்டுகிறது.

ஏன் எனில்…

வடக்கிலுள்ள மூன்று தீவுகளில் மின் உற்பத்தி திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு இதற்கு முன்னர் சீன நிறுவனம் ஒன்றுக்கு வழங்க திட்டமிடப்பட்டிருந்தது.

யாழிற்கு சொந்தமான நெடுந்தீவு, நயினாதீவு மற்றும் அனலைதீவு ஆகிய பகுதிகளில் திட்டமிடப்பட்ட மின்சக்தி திட்டத்தை சீனாவுக்கு கொடுக்காமல், இந்தியாவிடம் கையளிக்க இலங்கை திர்மானித்துள்ளது.

மேலும், இதனை முன்னரே அறிந்து கொண்ட சீனா, தாம் அந்த திட்டத்தை கை விட்டு பல நாட்கள் ஆகிறது என்று தற்போது கூறியுள்ளது. சீனா ராஜ தந்திர ரீதியில் தற்போது இலங்கையில் பின்னடைவை சந்தித்து வருவதாக, தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், இலங்கையில் இருந்து சீனாவை முற்றாக அகற்ற இந்தியா மற்றும் அமெரிக்கா புது திட்டம் ஒன்றை வகுத்து செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது.