Mai 12, 2025

இன்றும் கரை ஒதுங்கிய உடலம்!

யாழ்ப்பாணத்தின் கடற்கரைகளில் தொடர்ச்சியாக மனித உடலங்கள் கரை ஓதுங்குவது தொடர்கின்றது.

இன்றைய தினம் மாலை வடமராட்சியின் தொண்டமனாறு கடற்கரையில் மேலும் ஒரு உடலம் கரை ஓதுங்கியுள்ளது.

வடமராட்சி கடற்பரப்பில் கடந்த வாரம் வெவ்வேறு தினங்களில் 5 உடலங்கள் கரை ஒதுங்கியுள்ளன என்றும் அவை பருத்தித்துறை ஆதார மருத்துவமனையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறையும் விளக்கமளித்திருந்தது.

இந்நிலையில் இன்றைய தினம் மேலுமொரு உடலம் தொண்டமனாறு கடற்கரையில் கரை ஓதுங்கியுள்ளது.

இதனிடையே கரை ஒதுங்கிவரும் உடலங்களில் சித்திரவதை காயங்கள் பெருமளவு காணப்பட்டதை மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.