März 28, 2025

இன்று சர்வதேச மனித உரிமைகள் தினம்!

இன்று சர்வதேச மனிதஉரிமைகள் தினமாகும். சகல மனிதர்களும் தமக்கான உரிமைகளோடும் கௌரவத்தோடும் வாழ்வதையே மனித உரிமைகள் தினம் வலியுறுத்துகின்றது.

 

உணவு உடை உறையுள் என்பவற்றோடு மனித உரிமைகளில் நல்வாழ்க்கைக்கும் விடுதலைக்குமான உரிமை, பேச்சுத் சுதந்திரம், எழுத்துச் சுதந்திரம், சட்டத்தின் முன் சமத்துவம் போன்ற குடியுரிமை மற்றும் அரசியல் உரிமைகளும் அடங்கியிருக்கின்றன. அத்துடன் கலாச்சார செயற்பாடுகளில் பங்கெடுத்தல், வேலைக்கான உரிமை, கல்விக்கான உரிமை உட்பட சமூக பொருளாதார கலாச்சார உரிமைகளும் இவற்றில் உள்ளடக்கப்பட்டுள்ளன.