மன்னாரில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் போராட்டம்
சர்வதேச மனித உரிமைகள் தினமான இன்று (10) வெள்ளிக்கிழமை, காலை 10 மணியளவில் மன்னார் மாவட்ட காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடும் குடும்பங்களின் சங்கத்தின் ஏற்பாட்டில் மன்னார் பேருந்து தரிப்பிட்திற்கு முன் கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றது.மன்னார் மாவட்ட காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடும் குடும்பங்களின் சங்க தலைவி மனுவல் உதையச் சந்திரா தலைமையில் இடம்பெற்ற குறித்த கவனயீர்ப்பு போராட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள், அருட்தந்தையர்கள், மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள்,மன்னார் நகர சபையின் தலைவர்,உப தலைவர்,உறுப்பினர்கள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.
இதன் போது கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்ட எம் உறவுகள் எங்கே?,மனிதம் பாதுகாக்கப்படுகிறதா?, அரசே காணாமல் ஆக்கப்பட்ட எம் உறவுகள் எங்கே?,காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு நிரந்தர தீர்வை பெற்று தருவீர்களா? உள்ளடங்களாக பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்ட மை குறிப்பிடத்தக்கது.