März 29, 2025

வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் போராட்டம்

சர்வதேச மனித உரிமைகள் தினமான இன்று வவுனியா வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தினரால் தீப்பந்தம் ஏந்தி பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டது.இன்று (10) காலை 10.30 மணியளவில் வவுனியா கந்தசாமி ஆலயத்தில் ஆரம்பமாகிய குறித்த பேரணி மணிக்கூட்டு கோபுர சந்தியினை அடைந்து அங்கிருந்து கண்டிவீதி வழியாக பழைய பேருந்து நிலையப்பகுதியை அடைந்து நிறைவுற்றது.

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் வேண்டும் வேண்டும் சர்வதேச விசாரணை வேண்டும், நீதி கிடைக்கும்வரை போரோடுவோம், நீதியில்லாத நாட்டில் நீதிமன்றம் எதற்கு போன்ற கோசங்களை எழுப்பியிருந்ததுடன், பதாதைகளையும் ஏந்தியிருந்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்திஆனந்தன், முன்னாள் மாகாணசபை உறுப்பினர் செ.மயூரன் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் என பலரும் கலந்து கொண்டனர்.