அமெரிக்க நீர்மூழ்கிமீது சீன நீர்மூழ்கி மோதியதா?
2021 ஒக்டோபர் 2-ம் திகதி அல்லது அதற்கு முன்னர் அமெரிக்காவின் அணுவலுவில் இயங்கும் USS CONNECTICUT என்னும் நீர்மூழ்கிக்கப்பல் கடலுக்கடியில் இனம் தெரியாத பொருள் ஒன்றின் மீது மோதியதால் அதில் பயணித்துக் கொண்டிருந்த 11 கடற்படையினர் காயப்பட்டுள்ளனர் என செய்திகள் வெளிவந்திருந்தன. இந்த செய்தியை அமெரிக்கா 7-ம் திகதி தான் வெளியிட்டது. USS CONNECTICUT இந்த நிகழ்வின் பின்னர் குவாம் தீவில் உள்ள அமெரிக்கப் படைத்தளத்தைச் சென்றடைந்தது. USS CONNECTICUT பனிப்போர் காலத்தில் தேவை ஏற்படின் சோவியத் ஒன்றியத்தின் நீர்மூழ்கிக் கப்பல்களை துரிதமாக தாக்கி அழிப்பதற்கு 1990களில் $3பில்லியன் டொலர் செலவில் உருவாக்கப் பட்ட நீர்மூழ்கிக்கப்பலாகும். அந்த வகை நீர்மூழ்கிக் கப்பல்களுக்கு கடல் ஓநாய் என்ற குறியீட்டுப் பெயருண்டு.
தொடர்ந்து பயணித்த USS CONNECTICUT
USS CONNECTICUTஇன் அணித்தலைவர் அந்த நீர்மூழ்கிக் கப்பலில் அணு உலை பாதிப்பிற்கு உள்ளாகவில்லை என்றதுடன் அது செயற்படு நிலையில் உள்ளது என்றார். மோதலின் பின்னர் அது 1500மைல்கள் பயணித்தது. ஆனால் அப்பயணம் நீருக்கடியில் இல்லாமல் நீரின் மேற்பரப்பில் செய்யப்பட்டது.
தகவல் சூறையாடும் USS CONNECTICUT
National Interest என்னும் அமெரிக்க ஊடகம் USS CONNECTICUT நீர்மூழ்கிக்கப்பலில் நவீன உளவறியும் கருவிகள் பொருத்தப்பட்டிருக்கலாம் என்கின்றது. அது செல்லும் கடற் பிரதேசத்திலும் கரையிலும் உள்ள தொடர்பாடல்களைப் அக்கருவிகள் பதிவு செய்யக் கூடியவை என்கின்றது அந்த ஊடகம். தென் சீனக்கடல் போன்ற ஆழம் குறைந்த கடலில் உளவு பார்ப்பதற்கு சாதாரண கப்பல்களிலும் பார்க்க நீர்மூழ்கிக்கப்பல்கள் சிறந்தவை. National Interest எப்படிப் பட்ட பொருளில் USS CONNECTICUT மோதியது என்பதை உறுதி செய்யவில்லை என்கின்றது.
சீனாவின் கருத்து
சீனாவின் South China Morning Post ஊடகமும் மர்மமான பொருள் ஒன்றில் USS CONNECTICUT மோதியதாக செய்தி வெளியிட்டுள்ளது. US Naval Institute News இன் இணயத்தளத்திலும் தெரியாத நீரடியில் இருந்த பொருள் ஒன்றின் மீது மோதியதாக செய்தி வெளியிட்டுள்ளது. அணுக்கசிவு ஆபத்தை இனம் காணுவதற்காக மோதல் நடந்த இடம் பற்றிய தகவல்களை சீனா அமெரிக்காவிடம் கோரியுள்ளது. அமெரிக்கா அந்த நீர்மூழ்கிக் கப்பலகளில் பயணித்தவர்களைத் தனிமைப் படுத்து அணுக்கதிர்வீச்சுக்கு அவர்கள் உள்ளாகியுள்ளார்களா என ஆய்வு செய்கின்றது. மோதிய நீர்மூழ்கிக்கப்பல் பல விஞ்ஞானிகளாலும் நிபுணர்களாலும் ஆய்வு செய்யப்படுகின்றது.
ஹைனன் தீவு மோதல்
2001-ம் ஆண்டு ஏப்ரல் முதலாம் திகதி தென் சீனக் கடலில் பறந்து கொண்டிருந்த அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான EP-3 AERIES-II Signal Intelligence என்னும் உளவு விமானத்தை இரண்டு சீனாவின் J-811 இடைமறிப்பு விமானங்கள் சூழ்ந்து கொண்டன. அதில் ஒரு விமானம் EP-3 AERIES-II இன் கீழ்ப்பகுதியில் மோதியது. அதில் இருந்த ஒருவர் விமானத்தில் இருந்து வெளியேறி காணாமல் போனார். விமானத்தில் பயணித்த ஏனைய 24 பேரும் அவசர மாக சீனாவின் ஹைனன் தீவில் சீன அனுமதியுடன் தரையிறங்கினர். அவர்களையும் விமானத்தையும் சீனா கைப்பற்றியது. விமானத்தின் தொழில்நுட்பத்தை அறிய அதை சீன நிபுணர்கள் அக்கு வேறு ஆணி வேறாக பிரித்துக் கொண்டனர். அமெரிக்கா தனது விமானத்தையும் பயணிகளையும் திருப்பித் தருமாறு வற்புறுத்திய போது. விமானத் துண்டங்களையும் பயணிகளையும் திருப்பிக் கொடுத்தது. EP-3 AERIES-II உளவு விமானம் பன்னாட்டு வான்பர்ப்பில் பறந்து கொண்டே நூறுமைல்களுக்கும் அப்பால் உள்ள தொடர்பாடல்களை பதிவு செய்யவும் அங்குள்ள இலத்திரனியல் கருவிகளில் உள்ள தகவல்களைச் சூறையாடவும் வல்லது. அதன் ஆபத்தை உணர்ந்தே சீனா அதன் மீது மோதி தரையிறக்கியது. இதே போன்று USS CONNECTICUT நீர்மூழ்கிக்கப்பலுக்கும் நடந்திருக்கலாம் எனவும் கருதப்படுகின்றது.
தாமதம் ஏன்?
ஒக்டோபர் 2-ம் திகதி நடந்த நிகழ்வை அமெரிக்கா பகிரங்கமாக அறிவிக்க ஏன் ஐந்து நாட்கள் தாமதித்தது என்ற கேள்வி இந்த நிகழ்வில் சீனா தொடர்புபட்டிருக்கலாம் என்ற ஐயத்தை ஏற்படுத்துகின்றது. சீனா USS CONNECTICUT உள்ள உணரிகளால் இனம் காணப்படாத மூலகங்களால் ஆக்கப்பட்ட பொருள்களை அது வரும் வழியில் வைத்திருக்கலாம் எனவுக் கருதப்பட்டது.
செய்மதிப் படங்கள்
Type – 94 Jin Class SSBN என்ற சீனாவிற்கு சொந்தமான அணுவலுவில் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பல் அமெரிக்க கப்பல் சேதத் திற்கு உள்ளான வேளையில் சேதமடைந்த நிலையின் இன்னொரு சீனக் கடற்கலம் வழிகாட்ட நீரின் மேற்பரப்பில் பயணித்து சீனாவின் வடகிழக்கு மாகாணமான லயோனிங்கின் கடற்கரையில் உள்ள Bohai Shipyard சென்று திருத்தப்படுவதாக செய்திகள் வெளிவந்துள்ளன. HI Sutton என்ற படைத்துறை ஆய்வாளர் தனது hisutton.com என்ற இணையத்தளத்தில் ஐரோப்பிய விண்வெளி முகவரகத்தின் செய்மதியான Sentinel-2 எடுத்த படங்களை ஆதாரமாகக் காட்டியுள்ளார். ஆனால் இரண்டும் ஒன்றின் மீது ஒன்று மோதியிருக்கலாம் என அவர் கருத்து வெளியிடவில்லை. ஆனால் Elmer Yuen என்பவர் இந்திய Youtube Channel ஒன்றிற்கு அமெரிக்காவின் USS CONNECTICUT நீர்முழ்கிமீது சீனாவின் Type – 94 Jin Class SSBN நீர்மூழ்கி மோதியது என்கின்றார். ஆனால் அது உறுதிப்படுத்த முடியாதது என்றும் சொல்கின்றார்.
அணுவலுவில் இயங்கும் நீர்மூழ்கிகள் இரண்டு ஒன்றின் மீது ஒன்று மோதுவது பாரிய சூழல் பாதிப்பை ஏற்படுத்தக் கூடியது. அணு உலைகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் சீன நீர் மூழ்கி மோதியிருக்குமா?
Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest
Labels: Type – 94 Jin Class SSBN, USS CONNECTICUT, அமெரிக்கா, சீனா, தென் சீனக்கடல், நீர்மூழ்கிக்கப்பல்
No comments:
Subscribe to: Post Comments (Atom)
Featured post
உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்
விமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்…
- கேள்விக்குள்ளான இந்திய வான்படையின் வலிமை
- சீனாவிற்கு எதிரான படைத்துறை ஒத்துழைப்பில் சிறந்த நட்பாக இந்தியாவைக் கருதும் அமெரிக்காவிற்கு ஏமாற்றமா என்ற கேள்வி எழுந்துள்ளது. 2019 மார்ச்…
- மீண்டும் போட்டிக்களமாகும் கருங்கடல்
- ஆரம்பத்தில் கிரேக்கர் கருங்கடலை உபசரிப்பில்லாக் கடல் என அழைத்தனர். அதனூடாக பயணிப்பது சிரமம் என்பதாலும் அதன் கரையோரங்களில் வாழ்பவர்கள் எத…
- மனப்பாங்கை மாற்றி வாழ்க்கையில் முன்னேற சில வழிகள்
- நாம் எல்லோரும் சில மனபாங்குகளைக் கொண்டுள்ளோம். எமது முயற்ச்சிகளிலும் அதனால் கிடைக்கும் வெற்றிகளிலும் எமது மனப்பாங்குகள் முக்கிய பங்காற்றுக…