November 21, 2024

ஈழத்து யுவதிக்கு ஐ.நாவில் கிடைத்த அங்கீகாரம்

The United Nations Human Rights Council in Geneva, seen earlier this year during a presentation on the conflict in Syria. On Tuesday, Secretary of State Mike Pompeo and Ambassador Nikki Haley announced that the U.S. will be withdrawing from the council.

UNICEF இன் 75வது ஆண்டு பொன்விழா சர்வதேச மாநாட்டில் இளம் தலைமுறையின் முன்னுதாரண தலைமைத்துவ விருந்தினர் பேச்சாளராக ஈழத்து யுவதி செல்வி. G.சாதனா தமிழ் டயஸ்போறா அலையன்ஸ் Tamil Diaspora Alliance சார்பாக உரையாற்றுகிறார்.

தமிழ் டயஸ்போறா அலையன்ஸ் என்ற அமைப்பை புலம் பெயர் சமூகங்களின் இளைய தலைமைத்துவ அமைப்பாக இந்த சர்வதேச மாநாட்டுக்கு அழைப்பு விடுத்திருக்கிறது UNICEF.

அதன் பிரதிநிதியாக அமைப்பின் செயல் திட்டக்குழு பிரதி இயக்குனர் (deputy Director of Mission Council) G.சாதனா கலந்துகொள்கிறார். ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் உட்பட ஐ. நா சபையின் பல அங்கத்துவ அமைப்பின் இயக்குனர்களும் உரையாற்றுகின்றனர்.

இவ்வாறு புலம்பெயர் தமிழர் அமைப்பு ஒன்று சிறந்த தலைமைத்துவத்திற்காக சர்வதேச மாநாட்டிற்காக கலந்து கொள்ள அழைக்கப் படுவது இதுவே முதல்முறை என்று தெரியவருகிறது. வெவ்வேறு அமர்வுகளாக நடக்கும் இந்த மாநாட்டில் வரும் ஏழாம் திகதி சாதனா உரையாற்றுகிறார் என்று UNICEF இன் இணையப் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.