காணி புறோக்கரானார் வடக்கு ஆளுநர்?
இலங்கை படைகளிற்கு வடக்கில் காணிகளை பெற்று வழங்குவதில் வடக்கு ஆளுநர் மும்முரமாகியுள்ளார்.
கடற்படைக்கு காணி அளவீடு செய்ய முற்பட்டதை தடுத்தி நிறுத்தியமையினால் உரிமையாளர்களை தனியாக அழைத்து ஒப்புதல் பெறுவதற்கு வடக்கு ஆளுநர் முயற்சி செய்துள்ளார்.
சண்டிலிப்பாய் பிரதேச சபைக்கு உட்பட்ட மாதகல் பகுதியில் கடற்படையினருக்கு நிலம் சுவீகரிக்கும் நோக்கில்; அளவீடு செய்ய முறபட்ட சமயம் மக்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளால் தடுத்து நிறுத்தப்பட்டதோடு தெல்லிப்பளை பிரதேச செயலாளர் பிரிவின் கீழ் உள்ள கீரிமலைப் பிரதேசத்திலும் இதே நிலமையே காணப்பட்டது.
இதனால் அளவீடு செய்யும் தினம் தொடர்பான தகவல் வழங்கிவிட்டுச் செல்வதனாலேயே உரிமையாளர்களும் அரசியல்வாதிகளும் கூடி எதிர்ப்புத் தெரிவிப்பதால் இனிவரும் நாட்களில் முட்கூட்டிய அறிவிப்பு இன்றி இரகசியமாக அளவீடு செயவதற்கான ஏற்பாடுகள் இடம்பெறுகின்றது.
இதேநேரம் இதன் முதல் கட்டமாக இந்த ஆளுநர் பதவி ஏற்றதன் பின்பு இதுவரை அளவீடு செய்ய முற்பட்ட சமயம் தடுத்து நிறுத்தப்பட்ட 4 கடற்படை முகாம்களில் இனம் காணப்பட்ட 16 காணி உரிமையாளர்களையும் தனது அலுவலகத்திற்கு அழைத்துள்ள ஆளுநர் இழப்பீட்டுடன் அந்த நிலங்களை விடுவிக்க சம்மதம் கோரும் முயற்சியில் ஈடுபடவுள்ளார்.