März 28, 2025

உயிர் போகும் நேரத்தில் 244 புலம்பெயர்ந்தோரை காப்பாற்றிய இத்தாலி பொலிசார்!

 

இத்தாலிய கடலோர காவல்படையினர் கடலில் சிக்கித்தவித்த புலம்பெயர்ந்தோரை பத்திரமாக மீட்டுள்ளனர் என தகலவல் வெளியாகி உள்ளது.

அதாவது கடந்த சனிக்கிழமை கலாப்பிரியா கடற்கரையிலிருந்து சுமார் 50மைல் தொலைவில் படகு ஒன்றில் புலம்பெயர்ந்தோர் சிக்கித்தவித்த நிலையில் இத்தாலிய கடலோர காவல்படையினர் அதனை கண்டதாகவும் 16 மணி நேர போராட்டத்திற்கு பிறகு 41 குழந்தைகள் உட்பட 244 புலம்பெயர்ந்தோரை மீட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

கடல் சீற்றம் அதிகரித்த காரணத்தினால் சிக்கலான நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டதாகவும் கடலோர காவல்படையினர் குறிப்பிட்டுள்ளனர்.