நக்கினார் நாவிழந்தார்: துணைவேந்தரின் கதை!
நக்கினார் நாவிழந்தார் என்பதற்கு நல்லதொரு உதாரணம் யாழ்.பல்கலைக்கழக துணைவேந்தர் கதையாகும்.
தனது அரச விசுவாத்தை காண்பித்து துணைவேந்தர் கதிரையினை பெற்றுக்கொள்ள பதவி கிட்டுமுன் பலாலியில் இராணுவ தளபதியை சந்தித்து மாலையும் பொன்னாடையும் அணிவித்த கதை முன்னரே அம்பலமாகியிருந்தது.
இந்நிலையில் யாழ். மாவட்ட இராணுவ கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் ஜெகத் கொடித்துவக்குவை கௌரவிக்கும் நிகழ்வு ஒன்று நேற்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது.
அதிலும் தனது நன்றிக்கடனை நிறைவேற்ற ஓடோடி சென்று எந்தவித தொடர்புமற்ற நிகழ்வாயினும் கௌரவித்துள்ளார் துணைவேந்தர்.
காலத்திற்கொரு புறோக்கர்கள் இலங்கை படைகளிற்கோ அல்லது ஆட்சியாளர்களிற்கோ கிட்டிவிடும்.
ஆட்சி மாற்றத்தின் பின்னர் முளைத்துள்ள புதிய புறோக்கராக நாமல் ராஜபக்சவின் எடுபிடி கந்தசாமி கருணாகரன் என்பவர் வந்துள்ளார்.
காசோலை மோசடி உள்ளிட்ட பல சாதனைகளின் மைந்தனான இவர் சகிதமே துணைவேந்தர் பதவிக்கு மாலை போடப்போயிருந்த துணைவேந்தர் தற்போது யாழ்ப்பாணம் – கோண்டாவில் பகுதியில் உள்ள தனியார் விருந்தினர் விடுதி ஒன்றில் பொது சுகாதார பரிசோதகர் சங்கத்தின் ஆதரவில் மாலை போட சென்றுள்ளார்.
குறித்த கந்தசாமி கருணாகரனின் ஒருங்கிணைப்பில் இந்த நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
இதன்போது மேஜர் ஜெனரல் ஜெகத் கொடித்துவக்கு பொன்னாடை போர்த்தி நினைவு சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டாராம்.