November 23, 2024

உங்கள் பக்கத்து நியாயங்களை பேசலாம் வாருங்கள்


நியாயங்களைப் பேசலாம் வாருங்கள் நடந்தவற்றை பேசலாம் வாருங்கள்!

இன்று தமிழ‌ர் ஒருங்கிணைப்புக்குழுவில் வேலை புரிகின்ற பலரின் நியாயங்களை பேசலாம் வாருங்கள்!

மக்கள் தந்த பணத்தில் சம்பளம் வாங்கி வாழ்ந்த மைந்தர்களே உங்கள் கதை பேசலாம் வாருங்கள்!!

மக்களிடம் பணம்வாங்கி மக்களுக்கே பாடம் புகட்ட எண்ணும் மைந்தர்களே வாருங்கள்!

தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவை கட்டியமைத்தவர்கள் உங்கள் நிலை கண்டு புலம்புகின்றார்கள்! உங்கள் உள்ளத்தை தொட்டு உண்மையை பேசலாம் வாருங்கள்

ஆரம்ப கட்டமைப்பில் இருந்த ஒரு சிலரைத்தவிர மிகுதி உள்ள அனைவருமே கட்டமைப்பு வளர்ச்சிக்காக உழைத்தவர்கள் யாருண்டு என்பதை பொதுவெளியில் பேசலாம் வாருங்கள் !

யேர்மனில் ஆரம்ப காலகட்டங்களில் முகாங்களில் வசித்த மக்களிடம் தங்கள் சொந்த வாகனங்களில் தங்கள் சொந்தப்பணத்தில் மாகாணம் மாகாண
மாகச்சென்று 60 டி எம் அரசாங்க வழங்களில் இருந்தவர்களிடம் 5 டிமை மட்டும் வாங்கி தேசிய கட்டமைப்பை வளர்த்தவர்த்தவர்கள் இருக்க இடையில் வந்து ஓடிய வண்டியில் ஏறியவர்கள் நீங்கள் என்பதை நாங்கள் எடுத்துரைக்க வாருங்கள் பொதுத்தளத்தில் மக்கள் முன் பேசலாம் உங்கள் சரித்திரத்தை

சட்டம் போடும் சட்ட தாரிகளே வாருங்கள் பொதுவெளியில் பேச புதிய களம் அமைக்க நாங்கள் தயார்

மாவீரரின் செயல்களையும் தலைவனின் பாதைகளையும் சரியான முறையில் எடுத்து செல்ல முடியாமல் தடுமாறும் செயற்பாட்டாளர்களே புதிய களம் அமைக்க நாங்கள் தயார் பொதுவெளியில் பேசலாம் வாருங்கள் !

உங்களின் நல்வாழ்வுக்கான சுயநலம் உள்ள செயல்பாடு என்பதை பொதுவெளியில் பேசலாம் வாருங்கள் !

மாவீரர்கள் செய்த தியாகத்தின் மற்றவர்கள் வாழ்க்கையில் உங்கள் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளை புகுத்தி நின்று புலத்தில் மக்களை உங்கள் வசப் படுத்த எண்ணம் கொண்ட மைந்தர்களே பொதுவெளியில் பேசலாம் வாருங்கள் !

புலத்தில் மக்கள் இணைந்து நின்று உங்களுக்கான
மகிழ்வான வாழ்வை உருவாக்கித் தந்தார்கள் அந்த மக்களுக்காக உங்கள் செயற்பாடுகள் இல்லாத நிலை கண்டு பலவிதமாக இப்பொழுது தங்கள் செயல்பாடுகளை முன்னெடுக்க காரணமான காரணிகளை பொதுவெளியில் பேசலாம் வாருங்கள் !

உங்கள் கருத்துக்களை கூறுங்கள் ஒருங்கிணைப்பை ஒன்றாக்கி ஒற்றுமை ஓங்க நிற்கவேண்டிய நீங்களே தமிழ் மக்களின் வரலாற்ரை திரிவு படுத்திவிட்டு அது சரியானது என்னும் எண்ணம் கொண்டு புலம்பெயர் தமிழர்களை மூடர்களாக்கும் உங்கள் செயலை பொதுவெளியில் பேசலாம் வாருங்கள் !

கட்டி அமைத்த ஒருசிலர் தவிர இன்று தங்களை தலைமை என்பவர்கள்
தாயக நேசிப்போடு பயணிப்பவர்களை துரோகிகள் என்பது சரியா என்று நாங்கள் பொதுவெளியில் பேசலாம் வாருங்கள் !

மக்கள் கருத்தை ஏற்காது தனித்துவம் கொண்டு உங்கள் தனிவீட்டுச் சொத்தாக தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவை கையாழ்வதும் நீங்கள் து‌ரோகத்தனமாக மக்களின் பணத்தில் வாழ்ந்து எங்கள் மக்களுக்கே நீங்கள் இழைக்கும் துரோகத்தனம் சரியா என்று பொதுவெளியல் பேசலாம் வாருங்கள் !

பேசித் தீர்க்கவேண்டிய விடையங்களை அரசியல் தெளிவில்லா உங்கள் செயலால் தெருவெல்லாம் செல்லவைத்து இன்று பலர் பலகோணம் ஆகக்காரணம் ஆனவரே இதுபற்றி பொதுவெளியில் பேசலாம் வாருங்கள் !

தேசிய நிதியில் சம்பளம் எடுத்து உங்கள் வாழ்க்கையை நடத்தியவர்கள் என்பதை உறுதிப்படுத்த எம்மால் முடியும் அது பற்றியும பொதுவெளியில் பேசலாம் வாருங்கள் !

தலைவரின் தத்துவத்தை தாரக மந்திரத்தை மாவீரரின் தியாகத்தை மதிக்கத்தெரியாது கடமை மறந்த செயல்பாடாளர்களே
இதுபற்றி பொதுவெளியில் பேசலாம் வாருங்கள் !

உள்ளதை நல்லதை எடுத்துரைத்த எல்லோர் மீதும் து‌ரோகி முத்திரை குத்தும் உங்கள் முகத்திரை கிளிக்க பொதுவெளியில் பேசலாம் வாருங்கள் !

நாங்கள் அடிக்கல்லிட்டு எங்கள் தமிழரின் ஒருங்கிணைபுக்குழுவை உருவாக்கிவைக்க அதை சீரழிக்கும் துரோகிகள் நீங்களாகவே இருகின்றீர்கள் அதுபற்றி பொதுவெளியில் பேசலாம் வாருங்கள் !

மாவீரரின் செயல்களையும் தலைவனின் பாதைகளையும் சரியான முறையில் எடுத்து செல்ல முடியாமல் தடுமாறும் செயற்பாட்டாளர்களாக நீங்கள் என்னதான் மாவீரர்காலங்களில் உறுதிமொழி எடுக்கிறீர்கள்! என்பதை
எமக்கு எடுத்துரைக்க பொதுவெளியில் பேசலாம் வாருங்கள் !

உங்களின் நல்வாழ்வுக்காக அல்லது ஈழத்தமிழ்மக்களின் வரலாற்று பொதுவாழ்வுக்காக அல்லது மாவீரர்கள் செய்த தியாகத்தில் உங்கள் பணி என்ன !
என்பதை பொதுவெளியில் பேசலாம் வாருங்கள் !

மற்றவர்கள் வாழ்க்கையில் உங்கள் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளை புகுத்தி நின்று நீங்களும் புலம்பி நின்று நரிகளாக முதுகில் நரம்பற்றவர்களாக மற்றவர்களை கலாச்சார சீர்கெட்டவார்தைகளில் வசைபாடுகின்றீர்கள் அதுபற்றி பொதுவெளியில் பேசலாம் வாருங்கள் !

நீங்களும் கல்விக்கழகமும் எழுதிய விடையங்கள் மெல்ல மெல்ல வெளிவரத்துடங்கியுள்ளது என்பதை உணர்வதோடு ஒருமுறை எண்ணிப்பாருங்கள் நீங்கள் எல்லாம் கலாச்சாரத்தை பற்றியும் ஒழுங்காற்றல் பற்றியும் பேசுகிறீர்கள் அதையும் பொதுவெளியில் பேசலாம் வாருங்கள் !

தலைவன் இல்லாத தலைமை உங்களிடம் என்பதர்க்காக தமிழீழ மக்களை
மந்தைகள் என்று நினைக்கும் பித்தரே உங்கள் செயல்பற்றி உரத்து பொதுவெளியில் பேசலாம் வாருங்கள் !

தமிழினத்தின் முதுகெலும்புகள் புலம்பெயர் மக்கள் அவர்கள் உங்களைப்போன்ற புல்லுருவிகளுக்கு அஞ்சமாட்டார்கள் என்பதை உணர்த்த பொதுவெளியில் பேசலாம் வாருங்கள் !

தாயகத்தின் பேர்சொல்லி தங்களை வளர்த்த தியாகிகளே உங்கள் பக்கம் கூற ஞாயம் இருந்தால் பொதுவெளியில் பேசலாம் வாருங்கள் !

ஒற்றுமை ஓங்க நிற்கவேண்டிய நீங்களே வரலாற்று திரிவுகளை வளர்க்காதிர்கள் என்று எத்தனை பேர் சொன்னார்கள் கேட்டீர்களா?
அதுபற்றி பொதுவெளியல் பேசலாம் வாருங்கள் !

எத்தனை தமிழாலயத்தை உடைத்தீர்கள் அதற்கான சமாதானத்தை காட்ட உரியவர்களிடம் ஒழுங்கமைத்தபோதும் உங்களுக்கு இணைய விருப்பமில்லை
என்பதை பொதுவெளியில் பேசலாம் வாருங்கள் !

மாவீரர் நாள் இரண்டாகி துண்டாவதை கண்டு அதற்கான பேச்சு வார்தையில்
இருந்து வந்தவரை இடைமறித்து துரோகி நீ எங்கள் காரியாலயம் வரக்கூடாது என்றீர்கள் அதையும் பொதுவெளியில் பேசலாம் வாருங்கள் !

இந்த மாவீரர் நாள் சுற்காட்டில் இரண்டுபட இருந்த நிலையில் அவர்களுடன் கதைத்த ஒன்றுபட உங்கள் குழுவில் உள்ளவர்களிடம் கேட்டபோது உங்கள் தனிப்பட்ட விருப்பு வெறுப்பை அதிலும் பயன் படுத்தினீர்கள் அதையும் பொதுவெளியில் பேசலாம் வாருங்கள் !

போராளிக்குழுக்கள் உங்களிடம் இணைய அனுகிய போது மறுத்தீகள் அவர்கள் எங்களை நாடியபோது உங்கள் இணைப்பாளரிடம் நாம் கேட்க அவர் உங்களிடம்
கேட்க அதை மறுத்தீர்கள் அதையும் பொதுவெளியில் பேசலாம் வாருங்கள் !

காரணம் நாங்கள் மூன்றாம் தரப்பு என்றீர்கள் தலைவரே சிங்களவனிடம் கதைக்க தன்குழுவை அனுப்பினார் தரகர்கள் நீங்கள் மூன்றாம் நாலாம் தரப்பு என்று யாரை
சொல்கிறியள் உங்களையா எங்களையா இதுபற்றி பொதுவெளியில் பேசலாம் வாருங்கள் !

திருந்துங்கள் அல்லது ஒதுங்குங்கள் என்பதை அன்போடு கூறுகின்றோம்
மாவீரர்கள் மக்கள் தியாகங்களுடன் உங்கள் அரசியலை நடத்தாதீர்கள் நலம் விரும்பிகள் நாங்கள் தமிழ் இனத்தில் எம் மண்ணின் நலமான செயல்பாட்டில் நாம் என்றும் மாற மாட்டோம் நரிகள் புலத்தில் புலிகள் முன் உழையிடுமா என்று காலம் பதில் தர போராளிகள் பக்கம் மக்கள் இணைகின்றார்கள் புலி என புலத்தில் மு‌கத்திரை போட்ட சிலர் முகத்திரை கிளியும் நாள் வெகுதுரம் இல்லை என்பதே எமது இறுதி மொழியாகும் உறுதி மொழியாகும்

 

ஈழத்தமிழன்