உலகெங்கும் சீனாவுக்கு எதிரான பெரிய புரட்சிகள் உருவாகும் என நிபுணர்கள் கூறுகிறார்கள்.
இராக், ஆப்கானிஸ்தான் தோல்விக்கு பின் சர்வதேச அரசியலில் இருந்து அமெரிக்கா விலக ஆரம்பிக்க, அந்த இடத்தை சீனா பிடித்தது.
சீனாவின் வல்லாதிக்க வழிமுறை என்பது புவியியல் ரீதியில் முக்கியமான இடங்கள் இருக்கும் நாடுகளை கடன்கொடுத்து வழிக்கு கொண்டுவந்து, அந்த இடங்களை அடித்து பிடித்து வாங்குவது என்பதே
உகாண்டா அரசுக்கு 20 கோடி டாலர் கடன் கொடுத்தது சீனா. உகாண்டா அரசால் கடனை திருப்பிகட்ட முடியவில்லை. உகாண்டாவின் ஒரே விமானநிலையமான என்டெப்பி விமானநிலையத்தை பறிமுதல் செய்தது சீனா. நாட்டின் ஒரே விமானநிலையத்தை இழந்துவிட்டு „தவறு செய்துவிட்டோம்“ என தொலைகாட்சியில் கண்ணீர் வடித்தார் உகான்டா பிரதமர்.
தஜிகிஸ்தானுக்கு கடன் கொடுத்து பட்டுப்பாதையில் உள்ள பாமிர் மலைப்பகுதியில் 1158 சதுர கிமி இடத்தை வளைத்துபிடித்தது சீனா
லாவோஸ் அரசுக்கு கடன் கொடுத்து, கடன் கட்டமுடியாமல் லாவோஸ் அரசின் மின் துறையை முழுக்க கைப்பற்றியது சீனா. லாவோஸில் இனி ஒரு மின்விளக்கு எரியவேண்டும் என்றாலும் சீன அரசுக்கு தான் பணம்கொடுக்கவேண்டும்.
இலங்கையின் ஹம்பந்தோட்டா துறைமுகத்தையும், 6000 ஏக்கர் நிலத்தையும் இப்படி 99 ஆண்டு லீசுக்கு எடுத்தது சீனா. தவிரவும் சீனாவிடம் வாங்கிய கடனை கட்டமுடியாமல் ஒட்டுமொத்த இலங்கையின் உணவு இறக்குமதியும் பாதித்து பங்களாதேஷிடம் கடன் வாங்கும் நிலைக்கு தள்ளபட்டது இலங்கை
அங்காளி இலங்கை நிலை இப்படி என்றால் பங்காளி பாகிஸ்தானின் நிலை மிக மோசம். சீனாவிடம் 1600 கோடி டாலர் கடன்வாங்கியுள்ளது பாகிஸ்தான். வட்டிக்கு ஈடாக க்வாடகர் துறைமுகத்தை 40 ஆண்டுலீசுக்கு கொடுத்தது பாக். அத்துடன் அதற்கு வரியும் கிடையாது
ஆனால் அசலை திருப்பிகட்டவேண்டுமே? ஐ.எம்.எப்பில் கடன்வாங்கி கடைசியில் ஐ.எம்.எப் „க்டனை திருப்பிகொடு“ என கேட்க, பாக் கொடுக்கமுடியாமல் தடுமாற அதன்பின் பாகிஸ்தான் ரிசர்வ் வங்கியை கையகபடுத்தியது ஐ.எம்.எப். பாகிஸ்தான் ரிசர்வ் வங்கியிடம் இருக்கும் அன்னியசெலாவணியை பாக் தொடகூடாது என சொல்ல „பெட்ரோல் இறக்குமதிக்கு என்ன செய்ய“ என இம்ரான் பாய் அதிர்ச்சியடைய
„வரிகளை உயர்த்தவேண்டும். இலவசதிட்டங்களை நிறுத்தவேண்டும். அசலை திருப்பிகட்டவேண்டும்“ என கடன் கொடுத்த நாடுகள் சார்பில் ஐ.எம்.எப் வலியுறுத்த
சுமார் 10% பணவீக்கத்தால் மக்கள் தெருவுக்கு வந்து போராட ஆரம்பித்துள்ளநிலையில் என்ன செய்வது என புரியாமல் திகைத்துபோயிருக்கிறார் இம்ரான். சர்க்கரை விலை கிலோவுக்கு 100ல் இருந்து 160 ரூபாய்க்கு உயர, கோதுமை விலை உயர..ஆட்சி கவிழ்ந்து, ராணுவ ஆட்சி வரலாம் என பேசும் அளவு நிலைமை மோசமாகியிருக்கிறது
சாலமன் தீவுகளில் சீனாவை எதிர்த்து மக்கள் தெருவில் இறங்கி போராடி வன்முறையில் ஈடுபட்டு வரும் சூழல்.
ஆக கொரொனாவுக்கு அடுத்து உலகெங்கும் ஒரு மிகப்பெரிய பொருளாதார வீழ்ச்சி சீனாவால் வரும் என கணிக்கபடுகிறது. அதன் முடிவில் சீனா உலகின் தலைமை வல்லரசாக முடிசூடும்
ரொம்ப பிளான் பண்ணி தான் பண்ணிருக்காங்க…
~ நியாண்டர் செல்வன்