சட்டவிரோதமான முறையில் கொள்வனவு செய்த சொத்துக்களை பறிமுதல் செய்ய அரசாங்கம் நடவடிக்கை!
சிறிலங்காவில் போதைப்பொருள் கடத்தல் மூலம் சட்டவிரோதமான முறையில் கொள்வனவு செய்த சொத்துக்களை பறிமுதல் செய்ய அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இது தொடர்பில் 218 பேரின் தகவல்களை, போதைப்பொருள் தடுப்புப் பிரிவு, சட்டவிரோத சொத்துக்கள் அல்லது சொத்து விசாரணைப் பிரிவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு விசாரணைக்குட்படுத்திய போது பதிவு செய்யப்பட்ட 75 வழக்குகளில் இந்த நபர்கள் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன. போதை பொருள் விற்பனை மூலம் சேகரிக்கப்பட்ட பணத்தை பயன்படுத்தி நிலம், வாகனங்கள், தங்கம் போன்றவற்றில் முதலீடு செய்ய பயன்படுத்தப்பட்டதுடன், சட்டவிரோத சொத்துக்களை பணமோசடி சட்டத்தின் கீழ் கைப்பற்றும் பிரிவு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. இவ்வாறு போதைப்பொருள் விற்பனை மூலம் வரம்பற்ற பணம் மற்றும் சொத்துக்களை குவித்த தெமட்டகொடை ருவனுக்கு சொந்தமான தங்கம், 8 வாகனங்கள் மற்றும் பணம், சட்டவிரோத சொத்துக்கள் அரசாங்கத்தினால் கைப்பற்றப்பட்டுள்ளன.