November 22, 2024

கோத்தாவிற்கு பைத்தியம் வந்துவிடும்:குமார வெல்கம!

இலங்கையில்“நிறைவேற்று ஜனாதிபதிமுறையை நீக்க முடியாவிட்டால், குறைந்தது மீண்டும் பாராளுமன்றத்துக்கு அதிக அதிகாரத்தை வழங்க வேண்டும்“ எனத் தெரிவித்துள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம, இல்லையேல், நாட்டை கொண்டு செல்ல முடியாது.

தனி நபர் ஒருவருக்கு இதன் முழு அதிகாரத்தையம் வழங்க முடியாது. இது எல்லையற்ற அதிகாரங்களாகும்“ எனவும் தெரிவித்தார்.முன்னாள் ஜனாதிபதி, ஜே.ஆர். ஜயவர்தன பெண்ணை ஆணாக்கவோ ஆணை பெண்ணாக்கவோ முடியாது என கூறியுள்ளார். இப்போது அதனையும் செய்ய முடியும் நிலை உருவாகியுள்ளது எனக் குறிப்பிட்டார்.“ஆனால், எல்லையற்ற அதிகாரங்கள் ஒருவரிடம் இருக்கம் போது அவர் பைத்தியமாகிவிடுவார்.

மூளை கெட்டுவிடும். தனக்கு வேண்டப்பட்டவர்களை அருகில் வைத்து கொண்டு, நாட்டை ஆட்சி செய்ய பார்ப்பார். யாரிடமும் ஆலோசனைப் பெறமாட்டார். தானே எல்லோரையும் விட பெரியவன் என நினைத்து செயற்படுவார்“ என்றும் தெரிவித்தார்.“எனவே, இதிலிருந்து மீள்வதற்கு, அனைவரும் கலந்துரையாடி, நல்ல குழுவொன்றை அமைத்து, அரசாங்கத்துக்கு எதிரான அனைவரையும் ஓரணியில் திரட்ட வேண்டும்“ என்றார்.“அரசாங்கத்துக்கு எதிரான கட்சிகளின் தலைவர்கள் நல்ல மூளைசாலிகள்“ எனத் தெரிவித்த அவர், “நான் பாராளுமன்றத்தில் பல வருடங்கள் இருப்பதால் எனக்கு இது பற்றி தெரியும்.

ஆனால். அவர்கள் அதனை உரிய முறையில் பயன்படுத்த வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்த விடயத்தில் சிறுபான்மை கட்சிகளின் ஒத்துழைப்பையும் எம்மால் பெற முடியும்“ என தெரிவித்தார்.“சட்டரீதியாக 2024 ஆம் ஆண்டே ஜனாதிபதித் தேர்தல் நடத்ததப்படும்.

எனவே அதற்காக நாம் இப்போதிலிருந்து கத்தத் தேவையில்லை.

அதற்காக சிறந்த வேலைத்திட்டத்தை முன்னெடுக்க வேண்டும். அதுவரை நாம் பொநுறுத்திருக்க வேண்டும். ஆனால் 50 சதவீதம் புதிய முகங்களை நாம் கண்டிப்பாக அறிமுகப்படுத்த வேண்டும். இல்லையேல் எமது நாட்டில் எவரும் மிஞ்ச மாட்டார்கள். எல்லோரும் இந்த நாட்டை விட்டு செல்வர். இதனைத் தடுக்க முடியாது“ என்றார்.