ஆம்: இலங்கை தமிழரே: அமெரிக்கா!ம்.ஏ.சுமந்திரன் தனது முகநூலில் பதிந்துள்ளார்.
அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான உதவி செயலாளர் டொனால்ட் லூ அவர்களுடனான தமிழரசுக்கட்சியின் சந்திப்பைப் பற்றி பணியகத்தின் உத்தியோகபூர்வ ட்விட்டர் பதிவை எம்.ஏ.சுமந்திரன் தனது முகநூலில் பதிந்துள்ளார்.
„உதவிச் செயலாளர் லூ தமிழ் தேசியக் கூட்டமைப்பு மற்றும் உலக தமிழர் பேரவையுடனான தனது சந்திப்பின் போது, இலங்கை தொடர்பிலான அமெரிக்க வெளியுறவுக் கொள்கையில் மனித உரிமைகள் மையமாக இருப்பதை அடிக்கோடிட்டுக் காட்டினார். நிரந்தர சமாதானம் மற்றும் அவர்களின் நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிப்பதில் முழுக் குரல் கொடுப்பதற்காக இலங்கை தமிழ் மக்களுடன் அமெரிக்கா இணைந்து கொள்கிறதென தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை சிறுபான்மையினரென அமெரிக்க தரப்பு கருத்து வெளியிட்டு வந்த நிலையில் பல தரப்புக்களதும் ஆட்சேபனையினையடுத்து இலங்கை தமிழ் மக்களென மாற்றம் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.