November 21, 2024

இளையோர் அமைப்பும் 27 பல்கலைக்கழக தமிழ் சங்கங்களும் இணைந்து நடத்திய மாவீர வார தொடக்க நிகழ்வுகள்!

இன்று நாங்கள் மாவீரர் வாரத் தொடக்க நாளில் எம் உரிமைக்காக வீரச்சாவைடந்த எம் வீரமறவர்களை நினைவு கூறுவதற்காக கூடி உள்ளார்கள். தமிழீழத்துக்கும் தமிழ் தேசியத்துக்கும் அவர்கள் செய்த தன்னலமற்ற தியாகங்களை என்றும் மறவாமல் நூற்றுக்கணக்கான தமிழ் மாணவ மாணவிகள் இன்று லண்டன் பகுதியில் ஒன்று கூடியுள்ளார்கள்.

உணர்வெழுச்சியுடன் ஆரம்பிக்கப்பட்ட இந்  நிகழ்வு தமிழீழத் தேசியக் கொடியேற்றலுடன் ஆரம்பிக்கப்பட்டு அகவணக்கம், துயிலுமில்ல பாடல் என்று சகல மாவீரர்நாளுக்குரிய நிகழ்வகளுடன் சிறப்பே நடைபெற்றது. கூடுதலான பல்கலைக்கழக மாணவர்கள் பங்குபற்றியதால் தமிழீழத் தேசியத் தலைவரின் 2008 மாவீரர் நாள் உரையும் முழுமையாக ஒளிபரப்பப்பட்டது.

தாயகத்தில் தமிழ் மக்களுக்கு எதிராக நடைபெறும் உச்சகட்ட இனவழிப்பை வெளிக்கொண்டுவரவும் சர்வதேச அரசியல் சதிவலையில் இப்படியே எம்மினம் சிக்கி தவிக்கின்றது என்பதனையும் தலைவர் உரை மூலம் மாணவர்களுக்கு உரக்க சொல்லப்பட்டது.

பல மாணவர்களின் பேச்சு, நடனம் மற்றும் பாடல்களும் இந்  நிகழிவில் இடம்பெற்று இருந்தன, முழுக்க முழுக்க மாணவர்களுக்கான இந்த நிகழ்வில் 27 பல்கலைக்கழக தமிழ் சங்கங்கள் இணைந்து கொண்டமை அடுத்த தலைமுறைக்கு எமது போராட்டம் கடத்த படுகின்றது என்பதினையே உரக்க சொல்லுகின்றது.

அதேபோல மாரு பக்கத்தில் இளையோர் அமைப்பால் கடந்த காலங்களில் சேர்க்கப்பட இனவழிப்பின் வரலாற்று சித்திரங்களும் கருப்பு ஜூலை சார்ந்த சித்திரங்களும் மாணவர்களின் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன.  இறுதியாக தமிழீழத் தேசியக் கொடி கையேந்தலுடன் நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் பாடலுடன் நிகழ்வு நிறைவுபெற்றது.