தள்ளுவண்டியில் வீதி வீதியாக ஐஸ்க்ரீம் விற்ற தமிழர் இன்றும் பெரும் கோடீஸ்வரர்! குவியும் வாழ்த்துக்கள்!
ஐஸ் க்ரீம்!! இந்த பெயரை கேட்டாலே பலருக்கும் நாவில் எச்சில் ஊறும். அந்த அளவுக்கு இந்த குளர்ச்சி பொருளை விரும்புகிறவர்கள் அதிகம்.
இந்த ஐஸ் க்ரீம் மூலம் தமிழர் ஒருவர் பெரும் சாம்ராஜ்யமே அமைத்துள்ளார்.
ஆம் அவர் தான் ஆர்.ஜி சந்திரமோகன்! 10 பைசா குச்சி ஐஸ் தொடங்கி கோடிகளில் வியாபாரம் பார்த்து வருகிறார். சந்திரமோகனின் சொத்து மதிப்பு கடந்த மே மாத கணக்கின்படி $1.9 பில்லியன் ஆகும்.
1971ஆம் ஆண்டு முன்புவரை பத்து பைசாவிற்கு வீதியில் ஐஸ் விற்றவர் ஜிகே சந்திரமோகன். சொத்தை விற்று கடன் வாங்கி ரூ13ஆயிரத்தை திரட்டி 1971ஆம் ஆண்டு ஜிகே அண்ட் கோ நிறுவனத்தை உருவாக்கி அருன் ஐஸ்க்ரீம் என்னும் தயாரிப்பை தமிழகத்திற்கு கொடுத்தார்.
இன்று தமிழக பட்டித்தொட்டியிலும் இவருடைய தயாரிப்பான அருன் ஐஸ்க்ரீம் பிரபலமாகிவிட்டது. இதை தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது.
ஐஸ்க்ரீமிற்கு மூலதனம் பால் கொள்முதல் பிறகு அந்த பாலையும் தொழிலாக செய்தார் 1995ஆம் ஆண்டு அரோக்யா பால் என்னும் தயாரிப்பினை சந்தைகளில் இறக்கவிட்டார். அதுவும் இவருக்கு நல்ல ஒரு வெற்றியே பெற்றுக்கொடுத்தது.
அதோடு நின்றுவிடாமல் மோர் தயிர் வெண்ணைய் நெய் என்று பால் சம்பந்தப்பட்ட பொருட்களையும் சந்தையில் இறக்கிவிட்டார். எல்லாமே மக்களிடம் நல்ல ஒரு வரவேற்பை பெற்றது இன்று இவருடைய நிறுவனம் வருடத்திற்கு சுமார் ரூ5000 கோடிவரை வருமானம் ஈட்டுகிறது.