கலங்கியது கொழும்பு: தடைகளை உடைத்து திரண்ட மக்கள்
ஐக்கிய மக்கள் சக்தியினர் முன்னெடுத்துவரும் ஆர்ப்பாட்டப் பேரணி காரணமாக கொழும்பின் பல பகுதிகளிலும் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், தற்போது காலி வீதி, கொள்ளுபிட்டி பகுதியில் வாகன போக்குவரத்து முற்றாக தடைப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் சக்தி ஏற்பாடு செய்துள்ள அரசாங்கத்திற்கு எதிரான பேரணி கொழும்பில் தற்போது ஆரம்பமாகியுள்ளது.
இதன்காரணமாக கொழும்பு, சேர் மார்கஸ் பெர்ணான்டோ மாவத்தையின் போக்குவரத்து தேசிய அருங்காட்சியகத்திற்கு முன்னால் முழுமையாக தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வாகனங்களில் பயணிக்கும் நபர்களின் பெயர்ப் பட்டியலைத் தொகுப்பது, புகைப்படங்களை எடுப்பது என்று தனிமனிதரின் சுயாதீனத்திற்கு கூட சவால் விடுக்கும் அளவிற்கு பொலிஸாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்பதோடு, அந்த உத்தரவுகளின்படி செயல்படும் அதிகாரிகளுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி சட்ட நடவடிக்கை மேற்கொள்ளும் என்பதையும் சுட்டிக்காட்டுகின்றோம்.” என ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டாரவினால் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.