ஐயம்பிள்ளை ஐயாவும் விபரம் கேட்கிறார்!
சிறைகளில் நீண்ட காலமாக இருந்துவரும் தமிழ் அரசியல் கைதிகள் பற்றிய விபரங்களை தனக்கு அனுபபிவைக்குமாறு, ‚ஒரே நாடு ஒரே சட்டம்‘ ஜனாதிபதி செயலணியின் தமிழ் உறுப்பினரான ஐயம்பிள்ளை தயானந்தராஜா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பிள்ளையானின் சிபார்சில் ஒருநாடு அணியில் சேர்த்துக்கொள்ளப்பட்டவரே இவராவார்.
ஏற்கனவே ஜனாதிபதி கோபித்துக்கொள்ளார் என அரசியல் கைதிகளை விடுவிக்க புறப்பட்டுள்ளார்.
‚ஒரே நாடு ஒரே சட்டம்‘ ஜனாதிபதி செயலணியானது பொதுமக்களின் கருத்துக்களைப் பெற ஆரம்பித்துள்ள நிலையில், பேராசிரியர் ஐயம்பிள்ளை தயானந்தராஜா இந்த வேண்டுகோளை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
‚ஒரே நாடு ஒரே சட்டம்‘ என்ற வியடத்தை நடைமுறைப்படுத்துவது குறித்து ஆராய்ந்து சட்ட வரைவை தயாரிப்பதற்காக கலகொட அத்தே ஞானசார தேரர் தலைமையில் 13 பேர் கொண்ட செயலணியை கடந்த ஒக்டோபர் 26 ஆம் திகதி சிறிலங்கா அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ஸ நியமித்திருந்தார்.
எனினும் அதன் உறுப்பினர்களான பேராசிரியர் தயானந்த பண்டா மற்றும் விரிவுரையாளர் மொஹமட் இந்திகாப் ஆகியோர் பின்னர் குறித்த செயலணியில் இருந்த விலகியிருந்தனர்.
பின்னர் இராமலிங்கம் சக்கரவர்த்தி கருணாகரன், யோகேஸ்வரி பற்குணராஜா மற்றும் ஐயம்பிள்ளை தயானந்தராஜா ஆகிய மூவரும் புதிததாக செயலணிக்கு நியமிக்கப்பட்டனர்.
தற்போது 14 உறுப்பினர்களுடன் இயங்கிவரும் ‚ஒரே நாடு, ஒரே சட்டம்‘ ஜனாதிபதி செயலணியானது மக்களின் கருத்துக்களைப் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுத்துவருவது குறிப்பிடத்தக்கது.